கொரோனா பரவல் சென்னையின் நிலை என்ன? சென்னை வேளச்சேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா
தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
கொரோனா பரவல் - சென்னையின் நிலை என்ன?
சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 62.92 சதவீதம் ஆண்கள், 37.04 சதவீதம் பெண்களும், திருநங்கை ஒருவரும் உள்ளனர்.
நீண்ட நாட்களுக்கு பின் திரு.வி.க.மண்டலத்தில் புதிய தொற்றின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், ராயபுரத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதேபோல், கோடம்பாக்கம், தேனாம்பேட்டையில் மின்னல் வேகத்தில் தொற்று பரவல் உள்ளது.
தமிழகத்தில் மே 6-ம் தேதி உறுதி செய்யப்பட்ட 771 தொற்றுகளில், சென்னையில் புதிய உச்சமாக 324 பேருக்கு தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இதுவரை மொத்தம் பாதித்துள்ள 2328 பேரில், 348 பேர் குணமடைந்துள்ளனர். 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் நேற்று அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 60 பேருக்கும், தேனாம்பேட்டையில் 55 பேருக்கும், ராயபுரத்தில் 54 பேருக்கும், அடையாறு 38 பேருக்கும், வளசரவாக்கத்தில் 30 பேருக்கும், திரு.வி.க.நகரில் 17 பேருக்கும், அண்ணாநகரில் 22 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், தண்டையார்பேட்டையில் 19 பேரும், திருவொற்றியூரில் 8 பேரும், அம்பத்தூரில் 7 பேரும், பெருங்குடியில் 5 பேரும், மாதவரத்தில் 3 பேரும், ஆலந்தூரில் 3 பேரும், சோழிங்கநல்லூரில் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மணலியில் புதிதாக யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. சில நாட்களுக்கு பின் திரு.வி.க.நகரில் புதிதாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.அதேவேளையில் அடையாறு, தேனாம்பேட்டை, ராயபுரத்தில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோயம்பேடு பரவலால் கோடம்பாக்கத்தில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 271 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 6 நாட்களில் மட்டும் 1,874 பேருக்கு தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் சென்னையில் மட்டும் 48.2 சதவிகிதம் பேர் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
மண்டல வாரியாக மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை:
திரு.வி.க.நகர் -412
கோடம்பாக்கம் -387
ராயபுரம் மண்டலம் -375
தேனாம்பேட்டை -285
அண்ணா நகர் -191
வளசரவாக்கம் -176
தண்டையார்பேட்டை -168
அம்பத்தூர் -105
அடையாறு -91
திருவொற்றியூர் -40
மாதவரம் -30
பெருங்குடி -20
சோழிங்கநல்லூர் -15
ஆலந்தூர் -14
மணலி -13
குணமடைந்தவர்கள்
வயது வாரியாக பார்க்கையில்
30 முதல் 39 வயது வரை உள்ள நபர்கள் 505 பேருக்கும், அதிகபட்சமாக 20 முதல் 29 வயது வரை உள்ள நபர்களில் 539 பேருக்கும், தொற்று உள்ளது. குறைந்தபட்சமாக 9 வயதுக்கு கீழ் 86 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 80 வயதுக்கு மேல் 16 பேரும் பாதித்து உள்ளனர்.
கொரோனாவின் பிடியில் மத்திய சென்னை
ஆரம்பத்தில், வட சென்னையில் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. திரு.வி.க.நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை மண்டலங்களில் மட்டும் 955 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சென்னையில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 41 சதவீதமாகும்.
அதேபோல், கடந்த சில நாட்களாக சென்னை மத்திய மண்டலத்தில் தொற்று வேகமாக பரவி வருகிறது. சென்னையில் மத்திய பகுதிகளான கோடம்பாக்கம், அண்ணா நகர், தேனாம்பேட்டை, வளசரவாக்கம் மண்டலங்களில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1039 ஆக அதிகரித்துள்ளது. இது சென்னையில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 44.6 சதவீதமாகும்.
சென்னை வேளச்சேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளை மொத்தமாக வாங்கிவந்து வேளச்சேரியில் தள்ளுவண்டி மூலம் விற்பனை செய்து வந்த வியாபாரிக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் நெருங்கி பழகியவர்கள் என 20-க்கும் மேற்பட்டவர்களை சுகாதார துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.
இதில் ஏற்கனவே பாதிக்கப்பட்ட அந்த தள்ளுவண்டி வியாபாரியின் மனைவி உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது நேற்று உறுதியானது. இதில் 5 பேர் சிறுவர்கள் ஆவர். இதனால் வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி முழுவதும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது.
அதேபோல் தரமணியில் 2 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த பகுதிகளில் அடையாறு மண்டல செயற்பொறியாளர் முரளி தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
சென்னையை அடுத்த ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட மீனம்பாக்கம் 159-வது வார்டு காமராஜர் தெருவில் உள்ள கணவன், மனைவி, மகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 3 பேரையும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அதேபோல் ஆதம்பாக்கம் 163-வது வார்டுக்கு உட்பட்ட கரிகாலன் தெருவில் காய்கறி வியாபாரம் செய்த பெண்ணுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதனால் ஆலந்தூர் 12-வது மண்டலத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.
பெருங்குடி 14-வது மண்டலத்துக்கு உட்பட்ட புழுதிவாக்கம் 169-வது வார்டு ராமலிங்கம் நகர் பாரதி தெருவை சேர்ந்த பெண்ணுக்கும், பஜார் ரோட்டில் இறைச்சி கடை நடத்தும் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானதை அடுத்து இருவரும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுடன் பெருங்குடி மண்டலத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.