108 மெகாபிக்சல் கேமராவுடன் Mi 10 5G இந்தியாவில் அறிமுகம்; Xiaomi Mi 30W வயர்லெஸ் சார்ஜர் அறிமுகம்
தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
108 மெகாபிக்சல் கேமராவுடன் Mi 10 5G இந்தியாவில் அறிமுகம்இறுதியாக Mi 10 5G இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போனில் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட், 108 மெகாபிக்சல் கேமரா மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. இந்த போன் மார்ச் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டது, ஆனால் ஊரடங்கு காரணமாக வெளியீடு ரத்து செய்யப்பட்டது. நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனுடன் எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் 2 மற்றும் Xiaomi Mi பாக்ஸ் 4K ஆகியவை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டன.
போனின் விலை:
Mi 10 5 ஜி-யின் விலை ரூ.49,999 ஆகும். இந்த போன் 128 ஜிபி ஸ்டோரேஜில் கிடைக்கும். 256 ஜிபி ஸ்டோரேஜுடன் இந்த போனை வாங்க ரூ.54,999 செலவாகும். இந்த போனின் முன்கூட்டிய ஆர்டர்கள் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் தொடங்குகின. இருப்பினும், இந்த போன் எப்போது விற்பனை செய்யத் தொடங்கும் என்று சீன நிறுவனம் கூறவில்லை. Mi 10 5G ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்கப்படும்.
டூயல்-சிம் எம்ஐ 10, நிறுவனத்தின் MIUI 11 உடன் Android 10-ல் இயக்கும். இந்த போனில் 6.67 அங்குல வளைந்த AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தையும் 180 ஹெர்ட்ஸ் தொடு பதிலையும் கொண்டுள்ளது. போனின் உள்ளே ஒரு Qualcomm Snapdragon 865 சிப்செட், 8 ஜிபி வரை எல்பிடிடிஆர் 5 ரேம் மற்றும் 256 ஜிபி வரை யுஎஃப்எஸ் 3.0 ஸ்டோரேஜ் உள்ளது.
Mi 10 பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. இந்த கேமராவில் 108 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உள்ளது. 13 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் இரண்டு 2 மெகாபிக்சல் சென்சார்களுடன் வருகிறது. இந்த கேமராவில் 8 கே வீடியோ ரெக்கார்டிங் ஆதரவு உள்ளது. செல்ஃபி எடுக்க 20 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
போனின் உள்ளே 4,780 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இதில் 30W ஃபாஸ்ட் சார்ஜ் மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜ் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜ் ஆதரவு உள்ளது.
Xiaomi இந்தியாவில் Mi 30W வயர்லெஸ் சார்ஜரை அறிமுகப்படுத்தியுள்ளது. சீன நிறுவனத்திடமிருந்து புதிய வயர்லெஸ் சார்ஜருக்கு 30W வயர்லெஸ் சார்ஜிங் வேகம் கிடைக்கும். இது Qi சார்ஜிங் தரத்தை அடிப்படையாகக் கொண்டது.
இது வெப்பத்தை குறைக்க ஒரு உள்ளமைக்கப்பட்ட குளிரூட்டும் விசிறியைக் (cooling fan) கொண்டுள்ளது. சந்தையில் Mi 30W வயர்லெஸ் சார்ஜர், கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் வார்ப் சார்ஜ் 30 வயர்லெஸ் சார்ஜருடன் கடுமையாக போட்டியிடும்.
Xiaomi Mi 10 5G - SPECIFICATIONS
General
Design
Display
Hardware
Software
Camera
Network
Connectivity
Battery
Media
Data
Xiaomi Mi 30W வயர்லெஸ் சார்ஜர் அறிமுகம்
வயர்லெஸ் சார்ஜர் விலை:
இந்தியாவில் Mi 30W வயர்லெஸ் சார்ஜரின் விலை ரூ.2,299 ஆகும். இருப்பினும், இந்த சார்ஜர் ரூ.1,999-க்கு சிறப்பு முன்கூட்டிய ஆர்டர் விலையில் கிடைக்கிறது. இதன் விற்பனை மே 18 ஆம் தேதி Mi.com இணையதளத்தில் தொடங்கும்.
வயர்லெஸ் சார்ஜர் விவரங்கள்:
Mi 30W வயர்லெஸ் சார்ஜர் Qi தரத்தை அடிப்படையாகக் கொண்டது. இதன் பொருள், Mi 10 5G-ஐ சார்ஜ் செய்வதைத் தவிர, இந்த வயர்லெஸ் சார்ஜரை Apple மற்றும் Samsung போன்ற நிறுவனங்களின் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு சாதனங்களுக்கு பயன்படுத்தலாம். சார்ஜர் 30W வரை வயர்லெஸ் சார்ஜிங்கை வழங்குகிறது. ஆனால் ஷாவ்மி அல்லாத போன்களுக்கு 10W வரை வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது.