மகாராஷ்டிராவில் பாதிப்பு 10,000-ஐ தாண்டியது; இந்தியாவில் மாநில வாரியாக விவரம்; டிவிட்டர் கணக்கிலிருந்து பிரதமர் மோடியை கழற்றிவிட்டது ஏன்?
தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
மகாராஷ்டிராவில் பாதிப்பு 10,000-ஐ தாண்டியது; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,043 ஆக உயர்வு; 1147 பேர் பலி
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,000-ஐ தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,043 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1993 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 73 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 1147 பேர் உயிரிழந்த நிலையில், 8889 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 10,498 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 459 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1773 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்த இடத்தில் 4395 பேருக்கு தொற்று பாதிப்புடன் குஜராத் மாநிலம் 2ம் இடத்தில் உள்ளது. அங்கு, 214 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 613 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 2323 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1258 பேர் குணமடைந்துள்ளனர்.
மாநில வாரியாக விவரம்:
அசாமில் 42 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 29 பேர் குணமடைந்தது.
பிகாரில் 418 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 82 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 56 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 17 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 40 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 36 பேர் குணமடைந்தது.
கோவாவில் 7 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 7 பேர் குணமடைந்தது.
டெல்லியில் 3515 பேருக்கு பாதிப்பு; 59 பேர் பலி; 1094 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 313 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 209 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 2 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.
கேரளாவில் 497 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 383 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 2584 பேருக்கு பாதிப்பு; 58 பேர் பலி; 836 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 109 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 20 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 22 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 16 பேர் குணமடைந்தது.
மணிப்பூரில் 2 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 12 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 142 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 39 பேர் குணமடைந்தது.
பாணடிச்சேரி 8 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 5 பேர் குணமடைந்தது.
நாகாலாந்தில் 0 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 357 பேருக்கு பாதிப்பு; 19 பேர் பலி; 90 பேர் குணமடைந்தது.
உத்தரகண்ட்டில் 57 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 36 பேர் குணமடைந்தது.
கர்நாடகாவில் 565 பேருக்கு பாதிப்பு; 21 பேர் பலி; 229 பேர் குணமடைந்தது.
ஜம்மு காஷ்மீரில் 614 பேருக்கு பாதிப்பு; 8 பேர் பலி; 216 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 1038 பேருக்கு பாதிப்பு; 26 பேர் பலி; 397 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 795 பேருக்கு பாதிப்பு; 33 பேர் பலி; 139 பேர் குணமடைந்தது.
ஆந்திரப்பிரதேசத்தில் 1403 பேருக்கு பாதிப்பு; 31 பேர் பலி; 321 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 2660 பேருக்கு பாதிப்பு; 137 பேர் பலி; 482 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 2203 பேருக்கு பாதிப்பு; 39 பேர் பலி; 513 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
இமாச்சலப்பிரதேசத்தில் 40 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 28 பேர் குணமடைந்தது.
அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 16 பேர் குணமடைந்தது.
டிவிட்டர் கணக்கிலிருந்து பிரதமர் மோடியை கழற்றிவிட்டது ஏன்? வெள்ளை மாளிகை விளக்கம்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பிரதமர் அலுவலகம் என மத்திய அரசில் உயர் பதவி வகிப்போரின் 6 டிவிட்டர் கணக்கை ‘பாலோ’ (பின் தொடர்தல்) செய்து வந்த அமெரிக்காவின் வெள்ளை மாளிகை சமீபத்தில் திடீரென அவற்றை ‘அன்பாலோ’ செய்தது. இது சமூக வலைதளத்தில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியை வெள்ளை மாளிகை கழற்றிவிட்டது ஏன் என பலர் பரபரப்பாக பேச ஆரம்பித்தனர். இந்நிலையில், இதுகுறித்து வெள்ளை மாளிகை தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி கூறுகையில், ‘‘அமெரிக்க அரசின் மூத்த நிர்வாகிகளின் டிவிட்டர் கணக்கை மட்டுமே வெள்ளை மாளிகை பின்தொடர்ந்து வருகிறது.
கூடுதலாக அதிபரின் வெளிநாட்டு பயணங்களின்போது, சில டிவீட்களை மறுடிவீட் செய்வதற்காக சில காலத்திற்கு மட்டும் அந்தந்த நாடுகளின் தலைவர்கள் பின்தொடரப்படுவார்கள். பிறகு அன் பாலோ செய்யப்படும்’’ என்றார். அதிபர் டிரம்ப் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போதுதான், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பிரதமர் அலுவலகம், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் ஆகியோரின் டிவிட்டர் கணக்கை வெள்ளை மாளிகை பின்தொடர ஆரம்பித்தது. இது இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் புதிய பரிமாணம் என்றெல்லாம் நிபுணர்கள் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.