தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும்: ஒரு மதுக்கடையில் நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே - டாஸ்மாக் நிர்வாகம்
ஒரு மதுக்கடையில் நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே- டாஸ்மாக் நிர்வாகம்
ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, மதுபானக்கடைகளை திறப்பதற்கு இருந்த சட்டத்த தடைகள் விலகியது.
இதன்படி, தமிழகத்தில் நாளை டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாநில வாணிப கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
உச்ச நீதிமன்ற ஆணையைத் தொடர்ந்து, மதுபானக் கடைகள் நாளை முதல் திறக்கப்படும். பெருநகர சென்னை காவல்துறை எல்லை மற்றும் திருவள்ளூர் மாவட்டம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுபானக்கடைகள் திறக்கப்படாது. மேலும், மால்கள் வணிக வளாகங்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் இக்கடைகள் இயங்காது.
மதுபானக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். கடைக்கு வரும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள் நாளை முதல் திறக்கப்படும் என தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் அறிவித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மதுபான கடைகள் நாளை முதல் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் முன்பு பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை போல் சென்னை பெருநகர காவல் எல்லை மற்றும் திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குள் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மால்கள், வணிக வளாகங்கள், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும் என்றும் நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கைகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மதுபிரியர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.