எதிர்ப்பு பலமானதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் 15க்கு தள்ளி வைத்துள்ளார்கள்: மு.க.ஸ்டாலின் ட்வீட்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. அந்த தேர்வு ஜூன் 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபெறும் என்று கல்வித்துறை அறிவித்திருக்கிறது. இந்த தேர்வுக்கான ஆயத்த பணிகளில் கல்வித்துறையும், தேர்வுத்துறையும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு 4-ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டு இருக்கும் நிலையில், பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், இதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே, கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் பாக்கியுள்ள பிளஸ் 1 தேர்வுகள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கும். பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வில் மார்ச் 26ம் தேதி நடக்க இருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதால் அந்த தேர்வு ஜூன் 2ம் தேதி நடத்தப்படும். அதேபோல 34 ஆயிரத்து 842 மாணவர்கள் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் 24ம் தேதியில் நடந்த தேர்வை எழுத முடியாமல் போனது. அதனால், அந்த மாணவர்களுக்கு ஜூன் 4ம் தேதி தேர்வு நடத்தப்படும். பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 27ம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று முதல்வர் பழனிசாமியுடன், அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனையை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன் 10ம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுவதாக அறிவித்தார். அதில், ஜூன் 1ம் தேதி தொடங்க இருந்த தேர்வுகள் ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் 12ம் வகுப்பு மறுதேர்வு ஜூன் 18ம் தேதி நடைபெறும் என்றும் 11ம் வகுப்புகளுக்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின்:

'கொரோனா வைரஸ் காலத்தில் முறையான ஆலோசனையின்றி தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட 10ம் வகுப்பு தேர்வுக்கு எதிர்ப்பு பலமானதும் ஜூன் 15க்கு தள்ளி வைத்துள்ளார்கள். இப்பொழுதும் குழப்பம்தான். அதற்குள் நிலைமை சீராகிவிடுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மாணவரும்- பெற்றோரும் பதறாத வகையில் தம் திட்டத்தை அறிவிக்க வேண்டியது அரசின் கடமை!,'என்று குறிப்பிட்டுள்ளார்.#CoronaVirus காலத்தில் முறையான ஆலோசனையின்றி தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட #10thExam-ஐ எதிர்ப்பு பலமானதும் ஜூன் 15க்கு தள்ளி வைத்துள்ளார்கள். இப்பொழுதும் குழப்பம்தான்.— M.K.Stalin (@mkstalin) May 19, 2020
அதற்குள் நிலைமை சீராகிவிடுமா?
மாணவரும்- பெற்றோரும் பதறாத வகையில் தம் திட்டத்தை அறிவிக்க வேண்டியது அரசின் கடமை!