கொரோனா வைரஸ் தடுப்பூசி உலக மக்களுக்கு எப்போது கிடைக்கும்; அமெரிக்காவில் கொரோனா பலி 1½ லட்சம் ஆக உயரும் - புதிய கணிப்பு
தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
கொரோனா வைரஸ் தடுப்பூசி உலக மக்களுக்கு எப்போது கிடைக்கும்- உலக சுகாதார அமைப்பின் சிறப்பு பிரதிநிதிலண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில், உலக சுகாதார பேராசிரியராகவும் பணியாற்றி வரும் டேவிட் நபரோ கூறியதாவது:-
பாதுகாப்பான மற்றும் நன்கு பலன் தரக்கூடிய தடுப்பூசியை உருவாக்கக் குறைந்தது 18 மாதங்கள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதை அதிகளவில் உற்பத்தி செய்து, 780 கோடி உலக மக்களுக்கு கொண்டு செல்ல மேலும் ஒரு வருடம் ஆகும்.
சில கிருமிகளுக்கான பாதுகாப்பான தடுப்பூசி பல வருடங்களாகியும் உருவாக்க முடியவில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
கொரோனா குறித்த எச்சரிக்கையை முன்பே ஏன் தெரிவிக்கவில்லை என உலக மக்கள் தங்கள் நாட்டு அரசையும், உலக சுகாதார நிறுவனத்தையும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க மக்கள் நாம் இன்னும் விரைவாக செயல்பட்டுருக்க முடியாதா என கேட்கின்றனர்.
முன்பே முடிவுகளை எடுத்திருந்தால் நல்ல பலன் கிடைத்திருக்கும் என இப்போது நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.
இந்தியாவில் முதல் தொற்று கண்டறியப்பட்டபோதே, ஊரடங்கை அறிவித்திருந்தால், லட்சக்கணக்கான மக்கள் உடனடியாக பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் உயர்ந்து வரும் நிலையில், அதில் 50 முதல் 70 சதவீதம் பேருக்கு கொரோனா அறிகுறியே இல்லை என அரசு தரவுகள் கூறுகின்றன.
வலுவான நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கும் நபருக்கு, கொரோனா அறிகுறியே தெரியாது.ஆனால், அவரால் மற்றவர்களுக்கு நோய் பரவும் என நிபுணர்கள் நம்புகின்றனர் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா பலி 1½ லட்சம் ஆக உயரும் - புதிய கணிப்பு
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பும், பலியும் உயர்ந்து கொண்டே செல்கிறது. அங்கு 14 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றுநோய்க்கு ஆளாகி உள்ளனர். சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காத நிலையில், ஏறத்தாழ 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் அங்கு ஆகஸ்டு மாத தொடக்கத்தின்போது, கொரோனா வைரசுக்கு பலியாவோர் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரம் ஆக உயரும் என புதிய கணிப்பு வெளியாகி உள்ளது. இந்த கணிப்பை கூறியிருப்பது சியாட்டில் நகரில் உள்ள சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடு இன்ஸ்டிடியூட் ஆகும். இந்த நிறுவனம் முதலில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 475 பேர் பலியாவார்கள் என கடந்த வாரம் கணித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்று, தனது உச்ச நிலையை கடந்து விட்டதாக டிரம்ப் நிர்வாகம் கூறி உள்ளது. மாகாணங்களில் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு ஊக்கம் அளித்தும் வருகிறது.