நுரையீரலைச் சுத்தம் செய்ய தினமும் இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள் : ஆயுர்வேத அமைச்சகம் அறிவுரை - Pictures
இதனால் நுரையீரல் பாதுகாக்கப்படும்.
கொரோனா வைரஸ் முதலில் தாக்குவது நுரையீரல் என்பதால் தினமும் நுரையீரலைப் பாதுகாக்கவும், நுரையீரலை சுத்தம் செய்யும் வழிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஆயுர்வேத அமைச்சகம் சில குறிப்புகளை அளித்துள்ளது.
தினமும் மூக்கின் இரு துவாரங்களிலும் எள் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது நெய் என இந்த மூன்று வகைகளில் ஒன்றை காலை மாலை என இரு வேளையும் தடவுங்கள்.
1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது எள் எண்ணெய் ஏதாவது ஒன்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து வாயில் ஊற்றி 2 - 3 நிமிடங்களுக்கு நன்கு கொப்பளித்து துப்பவும். இதை இரண்டு நாளைக்கு ஒரு முறை செய்தால் போதும்.
இதனால் நுரையீரல் பாதுகாக்கப்படும். கிருமிகள் அடைபட்டிருக்கும் சளி வெளியேறும்.