’நைக்’ உடன் பொழுதைக் கழிக்கும் கீர்த்தி சுரேஷ் Pictures
நைக்குடன் இணைந்து ஒர்க் அவுட் செய்வதும், மாலை நேரத்தில் கொஞ்சி விளையாடுவது என இருக்கிறார்.
கொரோனாவால் நாடே பீதியின் பிடியில் உள்ளது. 144 தடையால் வெளியில் வர முடியாமல் தவிக்கும் மக்கள் தங்களைப் பொழுதுபோக்க உறவினர்களுடனும், இணையதளத்திலும் நேரத்தை செலவழித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகையர் திலகம் படத்தின் மூலம் தன் திறமையை முத்திரைப் பதித்த கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டிலும் கால் பதிக்கவுள்ளார். அதற்கான வேலைகளில் இருந்த சமயத்தில் லாக்டவுன் காரணமாக கீர்த்தியும் தற்போது வீட்டில் முடங்கியுள்ளார். இந்த சமயத்தில் தன் செல்லப்பிராணியுடன் பொழுதைக் கழித்து வருகிறார்.
ஹன் இன்ஸ்டாகிராம் முழுவதும் தன் செல்லப்பிராணி நைக்குடன் செல்ஃபி எடுத்தும், ஃபோட்டோஷூட் செய்தும் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு நைக் டையரீஸ் என ஹாஷ் டாக் உருவாக்கி ஷேர் செய்துவருகிறார். நைக்குடன் இணைந்து ஒர்க் அவுட் செய்வதும், மாலை நேரத்தில் கொஞ்சி விளையாடுவது என சமாளித்து வருகிறார்.
இப்படி செல்லப் பிராணியுடன் பொழுதைக் கழிப்பதும் மன அழுத்ததைப் போக்குவதற்கான தெரபி என ஆய்வுகள் கூறுகின்றன. உலக நாடுகள் மட்டுமல்லாது தற்போது சென்னையிலும் செல்லப் பிராணிகளை வைத்து மன அழுத்தத்தை போக்கும் கிளீனிக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மனநல ஆலோசகர்களும் தனிமையை உணர்ந்தால், தனிமையில் வாழ்கிறீர்கள் எனில் வீட்டில் நாய் , பூனை என செல்லப் பிராணியை வளர்ப்பது சிறந்த கம்பேனியனாக இருக்கும். தனிமையை போக்க செல்லப்பிராணிகளும் சிறந்த நண்பன் என மருத்துவர்களே கூறுகின்றனர்.