Matrimony OTT-Platforms Jobs Coupons Business

முன்பே எச்சரித்த சின்மயி: அந்தரங்க வீடியோக்கள் அடங்கிய காசியின் லேப்டாப் சிக்கியது; குண்டர் சட்டம் பாய்கிறது

இன்ஸ்டாகிராமில் பல பெண்கள் மற்றும் நான் இவர் மீது புகார் எழுப்பியதை நினைவு கூறுகிறேன். கடைசியாக இந்த நபர் சிறையில் இருக்கிறார் - சின்மயி
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, 100க்கும் மேற்பட்ட பெண்களை மோசடி செய்த ரோமியோ மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் காசி என்ற சுஜி (வயது 26). பட்டதாரியான இவர் சென்னையை சேர்ந்த ஒரு பெண் டாக்டரின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், டாக்டரை போல பல இளம்பெண்களை மிரட்டி பணம் பறித்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. முதலில் சமூக வலைதளத்தில் ஏற்பட்ட நட்பு மூலம் பெண்களை மயக்கி தன்னுடைய வலையில் வீழ்த்துவது, பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவர்களுடன் நெருக்கமாக இருப்பது, அந்த ஆபாச காட்சியை புகைப்படமாக எடுத்து வைத்துக் கொண்டு சமூக வலைதளத்தில் வெளியிடப் போவதாக மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட லீலைகளில் ஈடுபட்டுள்ளார். உள்ளூர் முதல் வெளி மாவட்டத்தில் உள்ள வசதியான குடும்பத்தை சேர்ந்த பல பெண்களிடம் அவர் காம லீலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆபாச வீடியோக்கள்

இதை தொடர்ந்து காசி பயன்படுத்திய செல்போன், லேப்டாப் மற்றும் ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த செல்போனை நேற்று ஆய்வு செய்தனர். அப்போது காசி பல பெண்களுடன் சேர்ந்து எடுத்த ஆபாச புகைப்படங்கள் செல்போனில் ஏராளமாக இருந்தன. மேலும் வீடியோக்களும் இருந்ததால் போலீசார் திகைத்து போனார்கள். அந்த அளவுக்கு காசியின் லீலைகள் இருந்துள்ளதாக தெரிகிறது. மேலும், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. லேப்-டாப் மற்றும் ஹார்ட் டிஸ்கை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. பொதுவாக காம லீலைகளில் ஈடுபடுபவர்கள், தங்களுடைய ஹார்ட் டிஸ்க்கில் பதிவு செய்து வைத்திருப்பார்கள். இதனால் அந்த ஹார்ட் டிஸ்கை ஆய்வு செய்தால், அதில் காசியின் பல அந்தரங்க விவரம் மற்றும் அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றிய படங்கள் இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

பெண் என்ஜினீயர்

இதற்கிடையே காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் அளிக்கலாம், அவரை பற்றிய ரகசியம் காக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நாகர்கோவில் நேசமணி நகரைச் சேர்ந்த 25 வயதான பெண் என்ஜினீயர் ஒருவர் நேற்று முன்தினம் காசி மீது புகார் அளித்தார். அதில், தன்னிடம் நெருங்கி பழகி நகை மற்றும் பணத்தை காசி அபகரித்ததாக குற்றம்சாட்டியிருந்தார். அதன்பேரில் காசி மீது போலீஸ் தரப்பில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக காசியுடன் நெருங்கி பழகிய நண்பர்களை பிடித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து தனிப்படை அமைத்தனர். இந்த நிலையில் காசி நண்பர்கள் 5 பேர் தனிப்படை போலீசாரிடம் சிக்கி உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கல்லூரியில் படித்தபோது, முகநூல் மூலமாக தொடர்பு கொண்ட காசி, காதல் வசனங்களை பேசி திருமணம் செய்து கொள்வதாக உருகினார் என அப்பெண் புகாரில் தெரிவித்துள்ளார். காசியின் குரூர எண்ணம் தெரியாத அப்பெண் காசியுடன் இயல்பாக பழகியுள்ளார். அதை தனக்கு சாதகமாக்கிய காசி, அப்பெண் வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்துகொண்டு, தனது காரில் அந்தப் பெண்ணுடன் சுற்றியுள்ளார்

அந்த பெண்ணுடன் தனிமையில் இருப்பதை விளையாட்டாக வீடியோ எடுப்பது போல் வீடியோவும் எடுத்துள்ளார் காசி. திடீரென தனது தாய்க்கு புற்றுநோய் வந்து விட்டதாகவும் அதற்கு மருந்து வாங்க வேண்டும் என்றும் நாடகமாகடி ஒரு லட்சம் ரூபாய் வேண்டும் என்று கேட்டு அந்த பெண்ணிடம் இருந்து பணம் பெற்றுள்ளார் காசி. அதே போன்று திடீர் திடீர் காரணங்களைச் சொல்லி அடிக்கடி பணத்தை கறந்துள்ளார் காசிஒரு கட்டத்தில் கையில் பணம் இல்லை என்று அந்த பெண் தெரிவித்த போது அவரது தங்கச் சங்கிலியை வாங்கி மோசடி செய்துள்ளார். சில நாட்களில் அந்த பெண்ணுக்கு போன் செய்வதை காசி நிறுத்தி கொண்டதுடன், அவர் தொடர்பு கொண்டபோதும் தவிர்த்து வந்துள்ளார். காசியால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண், காசியிடம் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார்

அப்போது தான் காசி தனது உண்மையான முகத்தை காட்டியுள்ளார். பணத்தை திருப்பிக்கேட்டால், அந்தரங்க வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்று கூறி காசி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதை தொடர்ந்து செய்வதறியாது இருந்த அந்த கல்லூரி மாணவி, தற்போது காசி போலீசில் சிக்கிய தகவல் அறிந்த பிறகு புகார் அளித்துள்ளார்.

ஏற்கனவே கோட்டாறு காவல்நிலையத்தில் ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காசியை கைது செய்த போலீசார் மேலும் ஒரு புதிய வழக்கை பதிவு செய்துள்ளனர். என்.எம் நகர் காவல்நிலையத்தில் மோசடி, வழிப்பறி, ஆபாசமாக வீடியோ எடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கட்டுடல் மோசடி பேர்வழி காசியின் போன் மற்றும் வீட்டில் இருந்த கணினியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர். செல்போனில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், காசி யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது

காசி நட்பு வட்டத்தில் இருந்த, பத்திற்கும் மேற்பட்ட நண்பர்களை தனித்தனியாக அழைத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர். ஆனால் காசியின் பர்சனல் லேப்டாப் இதுவரை சிக்காமல் இருந்துவந்துள்ளது. அதைக் கைப்பற்ற போலிசார் புது வியூகம் அமைத்தனர்.

காசி தொடர்பான அனைத்து இடங்களிலும் சோதனையிடுவது என்ற திட்டத்தின் அடிப்படையில், காசியின் குடும்பத்திற்கு சொந்தமான கோழிப்பண்ணையில் போலீசார் ஆய்வு நடத்தினர். திடீர் சோதனையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த ரகசிய லேப்டாப் போலீசாரின் கையில் சிக்கியுள்ளது. கணிணி, செல்போன் போன்றவற்றிற்கு மூன்றடுக்கு பாஸ்வோர்ட் வைத்து, காசி ரகசியம் காத்துவந்துள்ளார்

அதனால் ரகசிய பாஸ்வேர்டுகளை உடைத்து, லேப்டாப்பைத் திறந்து போலீசார் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். காதல் மோசடி மன்னின் பர்சனல் லேப்டாப்பில் பதிவாகியுள்ள விவரங்கள் பூகம்பத்தை ஏற்படுத்தலாம் என்கின்றனர் போலீசார்

இந்நிலையில் காதல் மோசடி மன்னன் காசியால் பாதிக்கப்பட்டவர்கள் 9498111103 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று குமரி மாவட்ட போலீசார் அறிவித்துள்ளனர். இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தவர்களின் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே காசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறித்து கருத்து பதிவிட்டிருக்கும் பாடகி சின்மயி, இன்ஸ்டாகிராமில் பல பெண்கள் மற்றும் நான் இவர் மீது புகார் எழுப்பியதை நினைவு கூறுகிறேன். கடைசியாக இந்த நபர் சிறையில் இருக்கிறார்” என்று கருத்து பதிவிட்டுள்ளார்.

குண்டர் சட்டம்

இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கைது செய்யப்பட்டுள்ள காசி மீது பெண் என்ஜினீயர் ஒருவர் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் காசி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன் வந்து புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவர்கள் ரகசியம் காக்கப்படும். காசி நிறைய குற்றச்செயலில் ஈடுபட்டு உள்ளதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காசியுடன் தொடர்பில் இருந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.

காஞ்சிபுரத்தில் ஊரடங்கை மீறி வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை மாத உற்வசம் நடைபெற்றதாக புகார்
காஞ்சிபுரத்தில் ஊரடங்கை மீறி வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை மாத உற்வசம் நடைபெற்று வருகிறது. ஊரடங்கை மீறி 20-க்கும் மேற்பட்ட பட்டர்கள், அர்ச்சர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளதாக தகவல் தெரிவிக்க்பட்டுள்ளது. வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் நிகழ்ச்சிக்கு கோயில் நிர்வாகம் உடந்தை எனப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பெரம்பலூர் நகராட்சியில் முழு ஊரடங்கு நீட்டிப்பு
மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பெரம்பலூர் நகராட்சியில் முழு ஊரடங்கை நீட்டிப்பு செய்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட், இறைச்சி கடைகள் திறக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறிய கடைகள் மதியம் 1 மணி வரை இயங்கலாம்; சூப்பர் மார்க்கெட்டுகள் டோர் டெலிவரி மட்டும் செய்ய அனுமதிக்கப்படும். பெரம்பலூர் நகராட்சி சார்பில் 54 வாகனங்களில் காய்கறிகளை விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad