ஊரடங்கை நீட்டிக்க விருப்பம்: பிரதமர் நரேந்திர மோடி இன்று மீண்டும் முதல்வர்களுடன் பேச்சு
அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று காலை 10 மணிக்கு பிரதமர் மோடி ஆலோசனை
அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று காலை 10 மணிக்கு காணொலியின் மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருக்கிறார். மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்புப்பணிகள் மற்றும் மே 3-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது ஆகியவை பற்றி முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசிக்கவுள்ளார்.
மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் மே மூன்றாம் தேதிக்கு பின்னரும் ஊரடங்கை நீட்டிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையே, இன்று பிரதமர் மோடி மீண்டும் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் வரும் 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அந்தந்த மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று பரவும் சூழலை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் மே 16ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மேலும் சில மாநிலங்களும் ஊரடங்கை நீட்டிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும் ஒடிசா மாநிலங்கள் மே 3க்கு பின்னரும் ஊரடங்கினை தொடருவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
குஜராத், ஆந்திரா, தமிழ்நாடு, அரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலங்கள் மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றும் என அறிவித்துள்ளன. இதற்கிடையே, பிரதமர் மோடி இன்று மாநில மற்றும் யூனியன்பிரதேச முதல்வர்களுடன் மீண்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கலந்தாலோசனை செய்கிறார். பிரதமருடனான ஆலோசனைக்கு பின் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முடிவு செய்ய அசாம், கேரளா மற்றும் பீகார் மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. தெலங்கானா மாநிலத்தில் மட்டும் ஊரடங்கை நீட்டித்து அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இதனால் ஊரடங்கு உத்தரவை தளர்த்தி கடைகளை திறக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை பின்பற்றப்போவதில்லை என்றும், தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதேபோல் உத்தரப் பிரதேசத்தில் ஏற்கனவே அத்தியாவசிய பொருட்கள் விற்பனையகங்கள், மருந்தகம் மற்றும் 11 வகையான தொழிற்சாலைகள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சூழ்நிலையில் மேலும் எந்த கடைகளும் திறக்க அனுமதிக்க முடியாது என முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நகரங்களில் மட்டுமே கட்டுப்பாடுகளை மாநில அரசு தொடரும் என்றும் மாநிலம் முழுவதுமான ஊரடங்கிற்கு அரசு விரும்பவில்லை என்றும் கூறப்படுகின்றது. ஒடிசா மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் இந்தூர், போபால், உஜ்ஜைனி, கார்கோன் உள்ளிட்ட நகரங்களில் மே 3ம் தேதிக்கு பின் ஊரடங்கு தளர்த்தப்படாது என முதல்வர் சிவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநில தலைமை செயலாளர் விஜய பாஸ்கர், மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும் என தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு குறித்து முடிவு செய்வதற்கு மாநில அரசுகளுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். குஜராத் துணை முதல்வர் நிதின் படேல், மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக பின்பற்றப்படும்” என்றார்.