கொரோனாவிலிருந்து மீண்டவரின் ‘பிளாஸ்மா’ மூலம் சிகிச்சை பெற்றவர் குணமடைந்தார்; தமிழகத்தில் இன்று முதல் ரேபிட் கருவி பரிசோதனை நிறுத்தம்
டெல்லியில் கொரோனாவிலிருந்து மீண்டவரின் ரத்தத்தில் இருந்து எடுக்கப்படும் ‘பிளாஸ்மா’ மூலம் சிகிச்சை பெற்றவர் குணமடைந்தார். இந்த சிகிச்சை முறையில் 4 நாட்களில் அவர் குணமடைந்ததை அடுத்து வென்டிலேட்டர் உதவியின்றி சுவாசிக்க தொடங்கியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு பிளாஸ்மா சிகிச்சை பெற்ற நபர் பூரண குணமடைந்துள்ளார்.
டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 49 வயது மதிக்கத்தக்க நபர் கடந்த 4ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் அவரது குடும்பத்தினர் வேண்டுகோள்படி பிளாஸ்மா சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்படி, ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவரின் பிளாஸ்மாவை 49 வயது நபரின் உடலில் செலுத்தி சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்த சிகிச்சை முறையின் மூலம் அவர், 4 நாட்களில் குணமடைந்ததை அடுத்து வென்டிலேட்டர் உதவியின்றி சுவாசிக்கத் தொடங்கியுள்ளார்.
அடுத்தடுத்த இரு சோதனைகளிலும் அவருக்கு கொரோனா பாதிப்பில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு அவரது உடல்நிலையைக் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் ரேபிட் கருவி பரிசோதனை நிறுத்தம்: சுகாதாரத்துறை
தமிழகத்தில் இன்று முதல் ரேபிட் கருவி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ரேபிட் கருவி பரிசோதனை முடிவுகள் தவறாக காட்டுவதால் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கண்டறியும் கருவியாக ரேபிட் என்ற கருவி சீனா தயாரிக்கப்பட்டு அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. 34000 ரேபிட் கருவிகள் தமிழகத்தில் கைவசம் உள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.
தமிழக அரசு சீனாவில் இருந்து 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வொண்ட்ஃபோ நிறுவனத்தின் கருவிகள் தரமற்றவை என இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. 20 லட்சம் கருவிகளையும் சீனாவுக்கே, இங்கிலாந்து திருப்பி அனுப்ப உள்ளது. சீனாவில் இருந்து தரமற்ற கருவிகளை தமிழக அரசு வாங்கவதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்தும் வொண்ட்ஃபோ நிறுவனத்திடம் 20 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்களை வாங்கி உள்ளது.