பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர் இன்று மருத்துவமனையில் காலமானார்

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் காலமானார்.
பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர் (வயது 68) உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள எச் என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது சகோதரரும் நடிகருமான ரந்தீர் கபூர் இந்த செய்தியை பி.டி.ஐ.க்கு உறுதிப்படுத்தினார்.
ரிஷிகபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு புற்றுநோய் உள்ளது, அவருக்கு மூச்சுத் திணறல் உள்ளது என ரந்தீர் கபூர் கூறினார். நடிகர் ரிஷிகபூர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் காலமானார்
கிட்டத்தட்ட ஒரு வருடம் அமெரிக்காவில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற பின்னர் ரிஷிகபூர் கடந்த செப்டம்பரில் இந்தியா திரும்பினார்.
பிப்ரவரி மாதம், ரிஷி கபூர் இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் ரிஷி கபூர் ஏப்ரல் 2 முதல் தனது டுவிட்டர் கணக்கில் எதையும் வெளியிடவில்லை.
பாலிவுட்டின் புகழ் பெற்ற நடிகராக இருக்கும் ரிஷிகபூருக்கு 68 வயது ஆகிறது. இவர் 1970 மற்றும் 80-களில் முன்னணி கதாநாயகனாக இருந்தார். ரிஷி கபூர் நடித்த மேரா நாம் ஜோக்கர், பாபி, ஹெல் ஹெல் மெயின், ஹபி ஹபி, கர்ஷ், அமர் அக்பர் அந்தோனி, ரபூ சக்கர், பனா, லவ் ஆஸ்கல், உள்ளிட்ட பல படங்கள் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை நிகழ்த்தின.
நடிகை நீத்து சிங்கை திருமணம் செய்து கொண்டார். ரிஷிகபூர் மகன் ரன்பீர் கபூர் தற்போது இந்தியில் முன்னணி கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.