சென்னையில் மிகத் தீவிரமாகும் கொரோனா; கோயம்பேடு சந்தையை இடம் மாற்ற அரசு உத்தரவு; எல்ஐசி கட்டடத்தில் தீ விபத்து
சென்னையில் மிகத் தீவிரமாகும் கொரோனா: இந்த 6 மண்டலங்கள் ஆபத்தானவை
தமிழகத்தில் நேற்று கண்டறியப்பட்ட 52 தொற்றுகளில் 47 தொற்று சென்னையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மிக கொரோனா மிக தீவிரமாகியுள்ளது. மேலும் 6 மண்டலங்கள் ஆபத்தானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இதுவரை மொத்தம் பாதித்துள்ள 570 நபர்களில், 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குணமடைந்து உள்ளவர்கள் எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது.
மண்டலம் வாரியாக பார்க்கையில், அதிகபட்சமாக ராயபுரத்தில் 158 பேரும், திரு.வி.க நகரில் 94 பேரும், தன்டையார்ப்பேட்டையில் 66 பேரும், தேனாம்பேட்டையில் 56 பேரும், கோடம்பாக்கத்தில் 54 பேரும், அண்ணாநகரில் 53 பேரும் உள்ளனர். மேலும், வளசரவாக்கத்தில் 17 பேரும், அடையாறில் 17 பேரும், திருவொற்றியூரில் 15 பேரும், அம்பத்தூரில் 15 நபரும், ஆலந்தூரில் 9 பேரும், பெருங்குடியில் 9 பேரும், மாதவரத்தில் 3 பேரும், சோழிங்கநல்லூரில் 2 பேரும், மணலியில் 1 நபரும் உள்ளனர்.
ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய 6 மண்டலங்களில் கொரோனா பரவல் மிக அதிகமாக உள்ளது.
கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி வரை ஒரு தொற்று கூட இல்லாமல் இருந்த அம்பத்தூர் மண்டலத்தில், நேற்று முன்தினம் வரை இரண்டு தொற்று இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 13 தொற்று அதிகரித்து உள்ளது. மண்டலம் வாரியாக மொத்தம் உயிரிழந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்கள்:
திருவொற்றியூர் - 15 - 0 - 4
மணலி - 1 - 0 - 0
மாதவரம் - 3 - 0 - 3
தண்டையார்பேட்டை - 66 - 1 - 15
ராயபுரம் - 158 - 5 - 43
திருவிக நகர் - 94 - 3 - 26
அம்பத்தூர் - 15 - 0 - 0
அண்ணாநகர் - 53 - 3 - 18
தேனாம்பேட்டை - 56 - 0 - 20
கோடம்பாக்கம் - 54 - 0 - 19
வளசரவாக்கம் - 17 - 0 - 6
ஆலந்தூர் - 9 - 0 - 4
அடையார் - 17 - 0 - 6
பெருங்குடி - 9 - 0 - 7
சோழிங்கநல்லூர் - 2 - 0 - 2
சென்னையில் ஆண்கள் 64.32% பேரும், பெண்கள் 35.68% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வயது வாரியாக பார்க்கையில், அதிகபட்சமாக 20 முதல் 29 வயது வரை உள்ள நபர்களில் 123 பேருக்கும், 30 முதல் 39 வயது வரை உள்ள நபர்கள் 120 பேருக்கும், தொற்று உள்ளது. குறைந்தபட்சமாக 80 வயதுக்கு மேல் 9 பேரும், 9 வயதுக்கு கீழ் 13 பேரும் பாதித்து உள்ளனர். 10 முதல் 19 வயதுள்ளோர் 46 பேருக்கும், 40 முதல் 49 வயதுள்ளோர் 103 பேருக்கும், 50 முதல் 59 வயதுள்ளோர் 83 பேருக்கும், 60 முதல் 69 வயதுள்ளோர் 52 பேருக்கும், 70 முதல் 79 வயதுள்ளோர் 20 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
வயது வாரியாக பாதித்தோர் எண்ணிக்கை:
0-9 = 13
10-19 = 46
20-29 = 123
30-39 = 120
40-49 = 103
50-59 = 83
60-69 = 52
70-79 = 20
80 = 9
சென்னையில் நோய்த் தொற்று பரவலை தடுக்க மாநகராட்சி சார்பில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 168 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.இருந்தும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்புகளை குறைக்க வீடு வீடாக மேற்கொள்ளும் அறிகுறிகள் பரிசோதனையை மேலும் தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
கோயம்பேடு சந்தையை இடம் மாற்ற அரசு உத்தரவு - சிறு, மொத்த வியாபாரிகள் எதிர்ப்பு
சிறு, மொத்த வியாபாரிகளை கேளம்பாக்கம் மற்றும் மாதவரத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு சந்தையை இடம் மாற்ற அரசு உத்தரவிட்டுள்ளதை அடுத்து சிறு மொத்த வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கொரோனா நோய் தீவிரம் காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி, பழங்கள் சந்தையை மூன்றாக பிரித்து கேளம்பாக்கம், மாதவரம், கோயம்பேடுகளில் இயக்குவதற்கு நேற்றைய தினம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட நிலையில், இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
அதற்கு முன்னதாக சிறு மொத்த வியாபாரிகளை கேளம்பாக்கம் மற்றும் மாதவரத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புறநகர் பகுதிகளுக்கு சந்தையைக் கொண்டு செல்வதால் வியாபாரம் பாதிக்கப்படும், பொதுமக்கள் வரமாட்டார்கள் என கூறி இந்த உத்தரவிற்கு சிறு மொத்த வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மொத்தமுள்ள நான்காயிரம் கடைகளில், சிறு மொத்த வியாபாரிகள் 2600 கடைகள் வைத்துள்ளனர்.
மொத்த வியாபாரிகளின் கடையை கோயம்பேடு சந்தையிலும், சிறு மொத்த வியாபாரிகளின் கடைகளை கேளம்பாக்கம் மற்றும் மாதவரத்திற்கு மாற்றுவதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சிறு மொத்த வியாபாரிகளின் கடைகளை கோயம்பேடு சந்தையில் இயங்கவும், மொத்த வியாபாரிகளின் கடையை இடமாற்றம் செய்யவும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.அல்லது 2600 சிறு மொத்த வியாபாரிகளும் கோயம்பேடு சந்தைக்கு அருகில் உள்ள சிஎம்டிஏ பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையத்தில் இடம் ஒதுக்கித் தரும்படி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
அரசு கோரிக்கையை ஏற்காத பட்சத்தில் ஊரடங்கு காலம் நிறைவடையும் மே 3ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்க சிறு மொத்த வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.
சென்னை பாரிமுனை கார்னரில் உள்ள எல்ஐசி கட்டடத்தில் தீ விபத்து
சென்னை பாரிமுனை கார்னரில் உள்ள எல்ஐசி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில், 5-வது தளத்தில் இருந்த ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
மின்கசிவு ஏற்பட்ட பாரிஸ் கார்னர்க்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராஜேஷ் கண்ணா தலைமையில் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தண்டையார்பேட்டை, திருவல்லிக்கேணி, எழும்பூர், ஆகிய இடங்களில் இருந்து வந்த 7 தீயணைக்கும் வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அருகில் இருக்கும் குடியிருப்புகள், மற்றும் கடைகளுக்கு தீ பரவாத வண்ணம் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.