தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்
தமிழகத்தில் தருமபுரி , கிருஷ்ணகிரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை
தமிழகத்தில் தருமபுரி , கிருஷ்ணகிரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 106 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு 1,075-ஆக உயர்ந்த நிலையில் இந்த 3 மாவட்டங்களில கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மூலக்கொத்தளம் சுடுகாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
சென்னை மூலக்கொத்தளம் சுடுகாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டல அதிகாரிகளுடன் அந்த பகுதி பொதுமக்கள் தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆண் ஒருவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை சென்னை மூலக்கொத்தளம் காட்பாடா சுடுகாட்டில் புதைப்பதற்கான ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டல அதிகாரிகள் மேற்கொண்டனர்.
இதையறிந்த அப்பகுதி குடியிருப்பு மக்கள், கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை இங்கு புதைக்கக்கூடாது என்று கூறி நேற்று முன்தினம் நள்ளிரவில் மண்டல அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர் ஜூலியஸ் சீசர், இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் பொதுமக்களிடம் சமரசம் பேசினர். கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை புதைப்பதற்கு முன் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட பின்னரே புதைக்கப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என எடுத்துரைத்தனர். அதன்பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாரிகள் என்ன சொன்னாலும் இந்த சுடுகாட்டில் கொரோனா வைரசால் உயிரிழந்தவரின் உடலை புதைக்க அனுமதிக்கமாட்டோம் என்று அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் மண்டல அதிகாரிகள் என்னசெய்வது என்று ஆலோசித்து வருகின்றனர்.
தென்காசியில் மேலும் ஒருவருக்கு கொரோனா
தென்காசி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் அந்த மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது.
சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மனித உயிர்களை இரையாக்கி வருகிறது. தமிழகத்தில் இந்த வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து உள்ளது. இதனால் கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோனா அறிகுறியுடன் வருபவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுகின்றனர். அங்கு அவர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் ஏற்கனவே 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் 4 பேரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவருக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன்மூலம் தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது.
தமிழகத்தில் தருமபுரி , கிருஷ்ணகிரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 106 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு 1,075-ஆக உயர்ந்த நிலையில் இந்த 3 மாவட்டங்களில கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 1075ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது.