கேரளாவில் மீனவர்களுக்கும், லாட்டரி, பீடி தொழிலாளர்களுக்கும் நிதி வழங்கப்படும்: முதல்வர் பினராயி விஜயன்
இந்த நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு வகையான, தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்குவதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கேரள தையல் தொழிலாளர் நல நிதி வாரியம், கேரள நகை தொழிலாளர் நல நிதி வாரியம், கேரள வேளாண் தொழிலாளர் நல நிதி வாரியம், கேரள மூங்கில் தொழிலாளர் நலத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்.
மீனவர்களுக்கும் தலா ரூ .2,000 வழங்கப்படும். கேரளாவில் சுமார் 1.5 லட்சம் மீனவர்கள் உள்ளனர். சுமார் 50,000 லாட்டரி விற்பனையாளர்களுக்கு தலா ரூ .1,000 வழங்கப்படும்.
பீடி தொழிலாளர்கள், மூலப்பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாகனங்கள் மூலம் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். நல வாரியத்திடமிருந்து ஓய்வூதியம் பெறாத சுமார் 1,30,000 கயிர் தொழிலாளர்களுக்கு தலா ரூ .1,000 வழங்கப்படும். இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.