கிருஷ்ணகிரியில் முதல் கொரோனா தொற்று: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மட்டுமே கொரோனா பாதிப்பு இல்லாமல் பச்சை மண்டலத்தில் இருந்து வந்தது
தமிழகத்தில் கிருஷ்ணகிரியில் மட்டும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படாமல் இருந்த நிலையில், இன்று ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. கிருஷ்ணகிரியில் மட்டும் இதுவரை பாதிப்பு கண்டறியப்படாமல் பச்சை மண்டலத்தில் இருந்தது.

இந்த நிலையில், இன்று மாலை அங்கு ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

ஓசூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 43 வயது நபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கடந்த மார்ச் 21-ம் தேதி மைசூர் சென்றுவந்தவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். 34 நாட்கள் கழித்து கொரானா தொற்று உறுதியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url