இதுவும் கடந்து போகும்; வெளிநாட்டில் வாழும் தமிழக மக்கள் கட்டுப்பாடுகளை பின்பற்றி உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் - நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்
கொரோனாவால் முழு உலகமும் பாதிப்பு அடைந்துள்ளது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்புக்கு உலகமோ இந்தியாவோ விதிவிலக்கல்ல.
நடிகர் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், கொரோனா பரவலை தடுக்க அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது; வெளிநாட்டில் வாழும் தமிழக மக்களுக்கு இந்த புதிய ஆண்டு ஒரு இனி ஆண்டாக அமைய வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். இந்த வைரசால் முழு உலகமே பாதிப்படைந்துள்ளது. இதற்கு இந்தியாவும், தமிழ்நாடும் விதிவிலக்கல்ல.
ஒவ்வொருவரும் எந்த நாட்டில் வாழ்கிறார்களோ அந்நாட்டின் கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார். சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறது. இந்தியாவிலும்கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
உறவினர்களை பிரிந்து வாழும் உறவினர்கள் குடும்பத்தினருக்கு எல்லா நேரமும் உங்களை பத்தி தான் சிந்தனை செய்கிறார்கள். நீங்க எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அந்த நாட்டு அரசு எந்த கட்டுப்பாடுகள் விதித்து இருக்கிறார்களோ அதை நீங்க தவறாமல் கடைபிடித்து, உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள். இது தான் நீங்க உங்க உறவினர்களுக்கும், உங்க குடும்பத்தாருக்கும் நீங்க கொடுக்கற இந்த ஆண்டின் மிகப்பெரிய பரிசு. நலமுடன் வாழ்க, கவலைப்படாதீங்க, இதுவும் கடந்து போகும் என்று பதிவிட்டுள்ளார்.