ஒரே நாளில் திருப்பரங்குன்றம் அருகே கொரோனா தனி சிறப்பு மையத்தில் இருந்து 27 பேர் வீடு திரும்பினர் - 8 பேருக்கு தொடர் சிகிச்சை

ஒரே நாளில் திருப்பரங்குன்றம் அருகே உள்ள கொரோனா தனி சிறப்பு மையத்திலிருந்து தொற்று இல்லாத 27 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 8 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூர் ஊராட்சியில் உள்ள ஆஸ்டின்பட்டி அரசு நுரையீரல் மருத்துவமனையில் 90 படுக்கைகள் கொண்ட கொரோனா தடுப்பு தற்காலிக சிறப்பு மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதில் தனிமைப்படுத்தும் பிரிவு என்று தனித்தனியாக 5 படுக்கைகள், தீவிர சிகிச்சை பிரிவு என்று 85 படுக்கைகள் போடப்பட்டுள்ளது.

இந்த கொரோனா தனி சிறப்பு மையத்தில் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டிற்கு சென்று ஊர் திரும்பியவர்கள் 34 பேர் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் கடந்த 14 நாட்களாக தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிப்பில் இருந்து வந்தனர். மேலும் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் முதற்கட்ட பரிசோதனையில் 27 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவ சான்றிதழ் அளிக்கப்பட்டது. இதனையடுத்து 27 பேரும் அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும் அவர்கள் வீட்டில் தனித்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதோடு சுகாதார துறையினர் மூலம் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

இதற்கிடையில் 34 பேரில் 27 பேர் வீட்டுக்கு சென்றதையடுத்து மீதி உள்ள 7 பேருக்கு மருத்துவ பரிசோதனை முடிவு வராததால் அவர்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இதே மருத்துவமனையின் சிறப்பு வார்டில்நேற்று முன்தினம் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர் 2 வாரம் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார் என்று சுகாதார துறையினர் தெரிவித்தனர்.


கொரோனா சிறப்பு மையத்தில் இதுவரை அனுமதிக்கப்பட்ட 35 பேர்களில் 27 பேர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 8 பேர் மட்டும் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவுடன் மல்லுக்கட்ட வரும் தண்ணீர் பிரச்சினை: குடிக்கவும், சமையலுக்கும் தண்ணீர் இல்லை - ஊரடங்கால் மக்கள் தவிப்பு
கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்து ஆட தொடங்கி இருக்கிறது.

கண்ணுக்கு தெரியாத கொரோனா அனைவரையும் வீட்டுக்குள் முடக்கி வைத்திருக்கிறது. யாரும், எங்கும் செல்ல முடியாத வகையில் ஊரடங்கு சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.

ஒருவித மன இறுக்கத்தின் மத்தியில் வாழ்க்கை ஓட்டம் நகரும் வேளையில், அடிப்படை தேவைகளுக்கு ஏங்க கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறோம். தினமும் அதிக பணம் கொடுத்து காய்கறி, மளிகை பொருட்களை வாங்குவதே போராட்டமாக மாறிவிட்டது.

இதற்கு மத்தியில் தண்ணீர் பிரச்சினை தமிழகம் முழுவதும் எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது. கோடை தன் கோர சிறகுகளை விரிக்க தொடங்கி இருக்கிறது. 100 டிகிரி என்ற அளவில் தினமும் வெப்ப அளவு பதிவாகி கொரோனாவை காட்டிலும் மிரட்டி வருகிறது.

ஒருபக்கம் கொரோனா இன்னொரு பக்கம் குடிநீர் பிரச்சினை என இருபெரும் பிரச்சினைகளில் மக்கள் சிக்கித்தவிக் கிறார்கள். சென்னை உட்பட பல பகுதிகளில் குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்ட நிலைக்கு தள்ளப்பட்டு விட்டன.

நிலத்தடி நீர்மட்டமும் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. மக்கள் குடிநீருக்காக அலையக்கூடிய ஒரு நிலை உருவாகியுள்ளது. ஆனால் ஏனென்றால் ஊரடங்கு சட்டம் காரணமாக அவர்களால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது.

மாநகர பகுதிகளில் லாரிகளில் தண்ணீர் வினியோகம் முற்றிலுமாக குறைந்துள்ளது. இதுதவிர குடிநீருக்காக விற்கப்படும் 25 லிட்டர் கேன் விற்பனை வெகுவாக குறைந்து விட்டது. இதனால் மக்கள் குடிநீருக்காகவும், சமையலுக்காகவும் தண்ணீர் இன்றி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இதை தடுக்கும் வகையிலும், தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்கவும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கிராமப்புறங்களில் மக்கள் காலி குடங்களுடன் வெகுதூரம் சென்று தண்ணீர் எடுத்து வரும் காட்சிகளைப் பார்க்க முடிகிறது. நகர்ப்புறங்களில் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் அவர்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தற்போது ஏப்ரல் தொடக்கத்தில் இருக்கும் நாம் ஜூன் மாதம் வரை கொரோனாவுடன், தண்ணீர் பிரச்சினையையும் கடக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

எனவே தண்ணீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. போர்க்கால அடிப்படையில் இதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]