பிரதமர் மோடி; நம் வீடே அலுவலகம்; இணையமே சந்திப்பு அறை; தமிழகத்திற்கு கூடுதல் ரேபிட் கிட் வேண்டும்: முதல்வர் பழனிசாமி கோரிக்கை
கொரோனாவால் தொழில்முறை வாழ்க்கையே மாறி விட்டதாகவும், நம் வீடே அலுவலகம், இணையதளமே சந்திப்பு அறை என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ், நமது தொழில்முறை வாழ்க்கையையே மாற்றி விட்டது. இப்போதெல்லாம் நமது வீடே அலுவலகமாகவும், இணையதளமே சந்திப்பு அறையாகவும் திகழ்கிறது.
நானும் இந்த மாற்றங்களுக்கு ஏற்ப என்னை மாற்றி கொண்டுள்ளேன். எனது மந்திரிசபை சகாக்களானாலும் சரி, அதிகாரிகளானாலும் சரி, உலக தலைவர்களானாலும் சரி, எல்லாரிடமும் காணொலி காட்சி மூலம்தான் சந்திப்பை நடத்துகிறேன். இதன்மூலம், சிக்கலான தருணங்களில் கூட நமது அலுவலகங்கள், வர்த்தகம் ஆகியவை வேகமாக இயங்க முடியும் என்பது தெளிவாகிறது. இன்று உலகமே வர்த்தக முன்னுதாரணத்தை தேடி ஓடி கொண்டிருக்கிறது. கண்டுபிடிப்புகளுக்கு பெயர் போன இளம் இந்தியா, புதிய பணி கலாசாரத்துக்கும் தலைமை தாங்க முடியும்.
கொரோனாவுக்கு பிந்தைய சூழ்நிலையில், நவீன பன்னாட்டு பொருள் வினியோக சந்தையில் உலகளாவிய மையமாக இந்தியா திகழ முடியும். இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
பணியிடங்களில் டிஜிட்டலுக்குத்தான் முதலிடம் அளிக்கப்படுகிறது. தொழில்நுட்ப புரட்சிகள், ஏழைகளின் வாழ்க்கையில் கூட மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
அதிகாரிகள் ஆதிக்கம், இடைத்தரகர் தலையீடு ஆகியவற்றை நீக்கி, நலப்பணிகளை விரைவுபடுத்துவது தொழில்நுட்பமே ஆகும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமியிடம் தொலைபேசியில் பிரதமர் மோடி கேட்டறிந்தார். தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட 209 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.
உலகத்தையே உலுக்கிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்தியாவில் மே மாதம் 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 3 முறை மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஏற்கனவே ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
இருப்பினும், கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால், மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்1,334 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 15,000-ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1477- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 365-லிருந்து 411-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை, பலி எண்ணிக்கை 15-ஆக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமியிடம் தொலைபேசியில் பிரதமர் மோடி கேட்டறிந்தார். தமிழகத்திற்கு கூடுதல் ரேபிட் கிட் வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். கூடுதல் ரேபிட் கிட் தருவதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார்.