சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருவருக்கு கொரோனா உறுதி எதிரொலி: மார்க்கெட்டை பிரிக்கும் திட்டத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு; தமிழக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பு
இருவருக்கு கொரோனா உறுதி எதிரொலி: கோயம்பேடு மார்க்கெட்டை பிரிக்கும் திட்டத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு...நாளை மீண்டும் பேச்சுவார்த்தை
கோயம்பேடு மார்க்கெட்டை 3 ஆக பிரிக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தியா உள்ளிட்ட 210 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கபட்ட மாநிலத்தில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது. இதற்கிடையே, கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு, மே 3-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
காய்கறி உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்கள் கட்டுபாடுகளுடன் செயல்பட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், கோயம்பேடு காய்கறி சந்தை தினந்தோறும் செயல்பட்டு வருகிறது. 1000 கணக்கான மக்கள் தினமும் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். இதற்கிடையே, கோயம்பேடு வியாபாரிக்கு ஒருவருக்கும், கோயம்பேட்டில் சலூன் கடை வைத்துள்ள ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதித்த 2 பேரும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கோயம்பேடு காய்கறி சந்தையில் சமூக இடைவேளி கடைபிடிக்கவில்லை என புகார் வந்த நிலையில், மார்க்கெட்டை 3 ஆக பிரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சந்தையில் உள்ள 3,100 கடைகளையும் 3 பங்காக பிரித்து கோயம்பேடு, கேளம்பாக்கம், மாதவாரம் பகுதிகளில் சந்தைகள் நடத்த அரசு திட்டமிட்டது. அதற்காக, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் சந்தை வியாபாரிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வியாபாரிகள் சந்தையை 3 ஆக பிரிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கேயம்பேடு மற்றும் ஆம்னி பேருந்து நிலையத்தில் சந்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
பின்னர் பேசிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கோயம்பேடு சந்தையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 பேருக்கு கொரோனா வந்தால் சந்தையை மூட வேண்டி வரும். ஊரடங்கு காலத்தில் ஒருநாள் கூட கோயம்பேடு சந்தையில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கவில்லை என்றார். மேலும், கோயம்பேடு சந்தை இடமாற்றம் குறித்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. மீண்டும் நாளை காலை 10 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பு
தமிழக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனாவால் ஈட்டிய விடுப்பு ஊதியத்தை நிறுத்தி வைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் கிடையாது என தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈட்டிய விடுப்பு ஊதியத்துக்கு விண்ணப்பித்திருந்தாலும் அதுவும் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் உள்ளாட்சி, வாரியம், பல்கலை., கூட்டுறவு உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆண்டுக்கு 15 நாள், 2 ஆண்டுகளுக்கு 30 நாள் ஈட்டிய விடுப்பு ஊதியம் வழங்கப்படுகிறது. ஆண்டு தோறும் அரசு ஊழியர்கள் எடுக்காத விடுமுறையை எழுதிக்கொடுத்து அதற்கு ஊதியத்தை பெறுவார்கள்.