அமேசான் காடுகளையும் விட்டுவைக்காத கொரோனா:பழங்குடியின சிறுவன் உயிரிழப்பு; இனமே அழியும் அபாயம்
அமேசான் காடுகளையும் விட்டுவைக்காத கொரோனா: வைரஸ் தாக்குதலால் பழங்குடியின சிறுவன் உயிரிழப்பு ; இனமே அழிவை சந்திக்கும் அபாயம்
கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் உலகையே பயமுறுத்தி வருகிறது. உலகளவில் இந்த கொடிய வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது. 16 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.
full-width
சுமார் 200 நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது அமேசான் காடுகளுக்கும் நுழைந்துவிட்டது. யனோமாமி என அழைக்கப்படும் பழங்குடியினத்தவர்கள் அமேசான் காடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் வெளியுலக தொடர்பு இல்லாதவர்கள்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா, இவர்களயும் விட்டுவைக்கவில்லை. அமேசான் மழைக்காட்டுக்குள் வசிக்கும் யானோமாமி பூர்வகுடி சமூகத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் கொரோனா வைரசால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் சுமார் 300 பூர்வகுடி சமூகங்களைச் சேர்ந்த எட்டு லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
கடந்த வாரம் கொகாமா என்ற பூர்வகுடி சமூகத்தை சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், யானோமாமி என்ற சமூகத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டான். இதைத் தொடர்ந்து அந்தச் சிறுவன் ரோரைமா மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தான். ஆனால் அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள பிரேசில் வெளியுறவுத்துறை மந்திரி லூயிஸ் ஹென்ரிக் மேன்டெட்டா, சிறுவனின் உயிரிழப்பை தொடர்ந்து யானோமாமி பழங்குடியின மக்களை பாதுகாக்கும் முயற்சியில் பிரேசில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அமேசான் பூர்வகுடிகளில் இதுவரை ஏழு பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.