தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) மட்டும் 98 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1075-லிருந்து 1173 -ஆக உயர்வு

தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1075-லிருந்து 1173 -ஆக உயர்வு
தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) மட்டும் 98 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்  தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 1173ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் வீட்டுக் கண்காணிப்பில் 33,850 பேர் உள்ளதாகவும், 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்தார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குள் ஏற்பட்ட பாதிப்பு மட்டுமே என்று தெரிவித்துள்ளார்.

மொத்தம் 58 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்

தமிழகத்தில் அரசு ஆய்வகங்கள் 25, தனியார் ஆய்வகங்கள் 9 உள்ளன

கொரோனா பாதிப்பு நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் மேலும்18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

சென்னையில் மேலும் 9 பேருக்கு வைரஸ் தொற்று - மொத்த எண்ணிக்கை 208 ஆக அதிகரிப்பு

கரூர் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு வைரஸ் பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 40 ஆக உயர்வு

மதுரையில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மொத்த எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் 34 மாவட்டங்களில் மொத்தம் 1,173 பேர் வைரஸ் தொற்றால் பாதிப்பு

கோவையில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 126 ஆக அதிகரிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 17 ஆக உயர்வு
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]