கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,352-ஆக உள்ளது: 980 பேர் குணம்

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 324ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 996 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9352-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை 2,09,504 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 308-லிருந்து 324-ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவில் இருந்து இதுவரை 980 குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா பாதித்தோரில் 71 பேர் வெளிநாட்டினர் எனத் தெரிவிக்கும் மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரங்கள், சிகிச்சையில் 980 பேர் குணமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கின்றன.

நாட்டில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில், மகாராஷ்டிரா முதலிடத்திலும், டெல்லி 2ஆவது இடத்திலும் உள்ளன.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட புள்ளி விவரங்களில் கடந்த 24 மணி நேரத்தில் நேற்று வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களுடன் ஒப்பிடுகையில் இது 90 உயர்ந்துள்ளதாகும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]