Matrimony OTT-Platforms Jobs Coupons Business

"சோனியா காந்தி கோழை" தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி; ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.7,500 இழப்பீடு - காங். தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தல்

"சோனியா காந்தி கோழை" தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி குற்றம்சாட்டி உள்ளார்.
மும்பையில் உள்ள தனது ஸ்டுடியோவிலிருந்து திரும்பி வரும் வழியில் இளைஞர் காங்கிரஸ் ஊழியர்களால் தாக்கப்பட்டதாக ரிபோப்ளிக் தொலைக்காட்சி நிறுவனர் மற்றும் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி குற்றம் சாட்டி உள்ளார்.

அர்னாப் அவரது மனைவி மற்றும் தொலைக்காட்சி ஆசிரியர் சாமியபிரதா ரே ஆகியோர் காரில்  ஸ்டுடியோவில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் கொரோலாவில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ரிபோப்ளிக் தொலைக்காட்சி தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து அர்னாப் வெளியிட்டு உள்ள வீடியோவில் காங்கிரஸ் தலைவர்களை இந்த தாக்குதலுக்கு குற்றம் சாட்டினார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை "கோழை" என்று அழைத்தார்.

அவர் வீடியோவில்

"அதிகாலை 12:15 மணியளவில், நான் என் மனைவியுடன் ஸ்டுடியோவிலிருந்து திரும்பிச் சென்று கொண்டிருந்தேன். அப்போது எனது காரை இரண்டு பைக்குகளில் வந்த  இரண்டு பேர் மறித்தனர். அவர்கள் என்னைச் சுட்டிக் காட்டினர், அவர்கள் என் காரைத் தாக்கி ஜன்னல் பலகையை உடைக்க முயன்றனர்.

அவர்கள் ஒருவித திரவத்தை வாகனத்தின் மீது வீசினார்கள்,கோஸ்வாமி அவர்கள் தன்னைத் தாக்க குறிப்பாக இளைஞர் காங்கிரஸ் ஊழியர்கள் என்று பாதுகாப்புப் பணியாளர்கள் எங்களிடம் தெரிவித்ததாகக் கூறினார். "அவர்கள் என்னை குறி  வைத்திருந்தார்கள், என்னைத் தாக்க உயர் நபர்களால் அவர்களுக்கு தகவல் வழங்கப்பட்டு உள்ளது.

சோனியா காந்தி  நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், நீங்கள் இப்போது நாட்டின் மிகப்பெரிய கோழை. என்னை எதிர்கொள்ள உங்களுக்கு தைரியம் இல்லை எனக்கு ஏதாவது நடந்தால், சோனியா காந்தி பொறுப்பாவார் என கூறினார்.

இந்து மதத்தினரின் பால்கர் கொலை குறித்த செய்தி விவாதத்தில், அர்னாப் சோனியா காந்தியின் மவுனத்தை குறை  கூறியதாக கூறப்படுகிறது, சோனியாகாந்தி  இப்போது "மகிழ்ச்சியாக" இருப்பதாகவும், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த புனிதர்கள் தாக்குதலை எதிர்கொண்டிருந்தால் அமைதியாக இருந்திருக்க மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

இது ஏராளமான காங்கிரஸ் தலைவர்களிடமிருந்து விமர்சனங்களைத் ஏற்படுத்தியது. செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, "இதுபோன்ற  டிவி அறிவிப்பாளர்களை பிரதமர் மற்றும் பாஜக புகழ்ந்து பேசுவது மிகவும் அவமானகரமானது" என்று குற்றம் சாட்டி இருந்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், பஞ்சாப் முதல்வருமான அமரீந்தர் சிங், சோனியா காந்திக்கு எதிராக கோஸ்வாமி கூறிய கருத்துக்கள், அவர் மிகவும் வெற்றிகரமான காங்கிரஸ் தலைவராக இருந்தார்.சோனியா காந்தி ஜி மீது அவதூறான மொழியில் அர்னாப் கோஸ்வாமி நடத்திய அபத்தமான தாக்குதல் முற்றிலும் வெட்கக்கேடானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. சோனியா இந்தியாவுக்கு வந்தபோது 22 வயதாக இருந்தார், மேலும் 52 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறார், அவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை நாட்டின் சேவைக்காக அர்ப்பணித்துள்ளார் என்று சிங் டுவீட் செய்துள்ளார்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.7,500 இழப்பீடு - காங். தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தல்
இந்தியா உள்ளிட்ட 205 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை 21,393 பேர்   கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 681 பேர் உயிரிழந்த நிலையில், 4257 பேர் குணமடைந்துள்ளனர். இருப்பினும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அடுத்த மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்ட ஊரடங்கால் 12 கோடி வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பித்த நிலையில் இருப்பதால் வேலையின்மை மேலும் அதிகரிக்கும். இந்த நெருக்கடியை எதிர்கொள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணமாக குறைந்தது 7,500 ரூபாயை வழங்க வேண்டியது அவசியம்.

மே 3 ஆம் தேதிக்குப் பிறகு நிலைமையை எப்படி சமாளிப்பது என்பது குறித்து மத்திய அரசிடம் எந்தவித தெளிவான திட்டமும் இருப்பதாக தெரியவில்லை. தற்போது விதிக்கப்பட்டிருப்பதையும் தாண்டி ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால் அதன் விளைவுகள் அபாயகரமானதாக இருக்கும்" என்றார்.

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியதாவது: பாஜக, மத வெறுப்பு வைரஸைப் பரப்பி வருகிறது. இந்த போக்கு ஒவ்வொரு இந்தியனுக்கும் கவலை தர வேண்டும். நாம் அனைவரும் கொரோனா வைரஸை ஒன்றாக எதிர்கொள்ள வேண்டிய இந்த சமயத்தில் இப்படி நடந்து வருவது வேதனைக்குரியது. நமது சமூக நல்லிணக்கத்துக்கு மிகப் பெரும் பாதிப்பு செய்யப்பட்டு வருகிறது. நாம்தான் அதை சரி செய்ய தொடர்ந்து செயல்பட வேண்டும்.

தற்போது கொரோனாவைத் தடுக்கும் நோக்கில் போடப்பட்டுள்ள ஊரடங்கு நடவடிக்கையானது விவசாயிகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் போன்றோரைக் கடுமையாக பாதித்து வருகிறது. வர்த்தக, வியாபார மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் முற்றிலும் முடங்கியுள்ளதால் கோடிக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad