தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) மட்டும் மேலும் 66 பேருக்கு கொரோனா; தமிழக மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம் வெளியீடு
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) மட்டும் 66 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் மேலும் கூறுகையில்“ தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1821 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி மேலும் 94 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதன் மூலம், கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 960 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 52 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொரோனாவுக்கு 835 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னையில் மட்டும் 495 பேருக்கு கொரோனா பாதிப்பு இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 23 பேர் உயிரிழந்துள்ளனர்” என்றார்.
சென்னையில் கொரோனா பாதிப்பை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:- 7,707 மாதிரிகளை பரிசோதனை செய்யும் அளவுக்கு தமிழகத்தில் வசதி உள்ளது. சென்னையை சுற்றி அதிக மக்கள் தொகை உள்ளதால் பாதிப்பும் உயர்ந்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகளவில் கொரோனா பரிசோதனை செய்ய முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்கள் 41 ஆக அதிகரித்துள்ளது. சென்னை, கோவையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 முது நிலை மருத்துவ மாணவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு, திருவண்ணாமலை , விழுப்புரத்தில், தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 7 பேர், தென்காசியில் 5 பேர், மதுரையில் 4 பேர், விருதுநகர், பெரம்பலூர் தலா 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 94 பேர் குணமடைந்துள்ளனர்.
இதுவரை 960 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 6 மருத்துவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்: அமைச்சர் விஜயபாஸ்கர்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 6 மருத்துவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். குணமடைந்த மருத்துவர்கள், செவிலியர் ஒருவர் பிளாஸ்மா சிகிச்சைக்கு ஒத்துழைக்க சம்மதம் தெரிவித்துள்ளனர் எனவும் கூறினார்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட வாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு;
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,942 -ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா முழுவதும் கொரோனாவில் இருந்து இதுவரை 5,210 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 779-ஆக அதிகரித்துள்ளது. இந்த கொடிய வைரஸ் தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது;
* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 960 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 94 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
* கொரோனாவால் மேலும் 1 நபர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது.
* சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* தமிழகத்தில் 25,503 பேர் இதுவரை வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். 19 பேர் அரசு கண்காணிப்பில் உள்ளனர்.
* தமிழகத்தில் இதுவரை 80,110 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று மட்டும் 7,707 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 41 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 835 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் 50.72 % பேர் குணமடைந்துள்ளனர்.
* சென்னையில் மக்கள்தொகை அதிகம் என்பதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது.
* நாட்டின் நலன் கருதி முழு ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 6 மருத்துவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்த மருத்துவர்கள், செவிலியர் ஒருவர் பிளாஸ்மா சிகிச்சைக்கு ஒத்துழைக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.
* தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 49 பேர் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
* தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு இதுவரை மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.