தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் மேலும் 64 பேருக்கு கொரோனா; தமிழக மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம் வெளியீடு
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 64 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1885 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 960-ல் இருந்து 1020 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று மட்டும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1885 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 523-ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் இன்று மட்டும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இன்று 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் தலா 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து இன்று 60 பேர் வீடு திரும்பியுள்ளனர். அதன்மூலம் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1020 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1885 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா பாதித்தவர்களில் சென்னையில் மட்டும் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் மூலம், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில், இன்று 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 60 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 960-ல் இருந்து 1020 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட வாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு;
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,917-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து இதுவரை 5,914 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பிய நிலையில் தொற்று காரணமாக இதுவரை 826 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய வைரஸ் தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 1020 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 60 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
* கொரோனாவால் மேலும் 1 நபர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளது.
* சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 523 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* தமிழகத்தில் 25,503 பேர் இதுவரை வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். 19 பேர் அரசு கண்காணிப்பில் உள்ளனர்.
* தமிழகத்தில் இதுவரை 87,605 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று மட்டும் 7,495 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 41 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 838 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் 54.11 % பேர் குணமடைந்துள்ளனர்.
* சென்னையில் மக்கள்தொகை அதிகம் என்பதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது.
* தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு இதுவரை மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
* இன்று பாதிக்கப்பட்டவர்களில் 39 ஆண்கள், 25 பெண்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.