சென்னை சமூக பரவலை நோக்கி சென்று கொண்டிருக்கிறதா? பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை
சென்னை சமூக பரவலை நோக்கி சென்று கொண்டிருக்கிறதா?
சென்னையில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை திடீரென தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு யாரிடம் இருந்து இந்த தொற்று ஏற்பட்டது என்ற சங்கிலி தொடரை கண்டுபிடிக்க முடியாமல் சுகாதாரத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர். கொரோனா நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தால் மட்டுமே இதிலிருந்து மக்கள் முழுமையாக விடுபட முடியும். இல்லாவிட்டால் நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலை தான் தொடர வாய்ப்புள்ளது. யாருக்கு கொரோனா தொற்று உள்ளதோ அவர் சம்பந்தப்பட்ட மற்றும் அவருடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி அவர்களுக்கு பரிசோதனை செய்தால் மட்டுமே இந்நோய் தொற்றை தடுக்க முடியும்.
அப்படி ஒரு நோயாளியை கண்டறியும் போது அவருடன் தொடர்புடையவர்களை சுகாதாரத்துறையினர், காவல் துறையினருடன் இணைந்து கண்டறிந்து வருகின்றனர். சைபர் கிரைம் உதவியுடன் தொடர்புடையவர்கள் கண்டறியப்பட்டு அவர்களின் சங்கிலி தொடரை உடைத்து வருகின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,058 ஆக அதிகரித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு கொரோனா வந்தது என்று கண்டறிய முடியாதது அதிகாரிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக சென்னையில் தான் இந்த நிலை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 103 பேர் உள்ளனர்.
சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 673 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை சமூக பரவலை நோக்கி சென்று கொண்டிருக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
செங்கல்பட்டில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை
செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்களில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.