நாமக்கல்லில் ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா! தமிழக மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம் வெளியீடு;
தமிழகத்திலேயே அதிக அளவாக நாமக்கல்லில், இன்று 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242-லிருந்து 1267-ஆக உயர்ந்துள்ளதாக தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
நாமக்கல்லில் இன்று ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் 50-ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
தமிழகத்தின் 22 மாவட்டங்களை கொரோனா தொற்று அதிகம் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தேசிய அளவில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது.
தற்போது வரை, 1267 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 15 பேர் உயிரிழந்துள்ளனர். 180 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 62 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 25 பெருக்கு மேலும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது எனவும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1267-ஆக உயர்ந்துள்ளது என கூறினார். தற்போது 62 பேர் குணமடைந்து வீடு திரும்ப உள்ளார்கள் எனவும் குணமடைந்தோரின் எண்ணிக்கை 180-ஆக உயர்ந்துள்ளது என கூறினார். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணி்கை 15-ஆக உயர்ந்துள்ளது என கூறினார். இந்நிலையில் அரசு மருத்துவர்கள் 6 பேர், தனியார் மருத்துவர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது என கூறினார். கொரோனாவால் கட்டுப்படுத்துவது பெரும் சவலாக உள்ளது எனவும் தெரிவித்தார். தமிழக அரசு தான் முன்னெச்சரிக்கையாக அனைத்து உபகரணங்களையும் தயாராக உள்ளது என கூறினார். வெளிநாடுகளைப் போல் உயிரிழப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.
சராசரியாக 5,590 பேருக்கு பரிசோதனை செய்யும் வகையில் கருவிகள் உள்ளதாக கூறினார். தற்போது 3,337 வென்டிலேட்டர்கள் தமிழகத்தில் உள்ளதாகவும், 2 லட்சம் பிபிஇ கவசங்கள் தமிழக அரசிடம் உள்ளதாக தெரிவித்தார். 3 லட்சம் என்95 முகக்கவசங்கள் அரசிடம் உள்ளதாகவும், 1,95,000 பிசிஆர் கிட் உள்ளன எனவும் கூறினார். அனைத்து மாவட்டங்களுக்கும் பிசிஆர் கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன எனவும் கூறினார்.
இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 1267ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது.
அடுத்த 3 நாட்களில் தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் இருக்காது, ஜீரோ ஆகும்; சிவப்பு மண்டல பகுதிகளில் தற்போதைய ஊரடங்கு நடைமுறை தொடர்ந்து இருக்கும் என்று: முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
கொரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கு குறித்து அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தப்பட்டது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அரசின் சிறப்பான பணிகளை எதிர்கட்சிகள் திட்டமிட்டு தவறாக விமர்சனம் செய்கின்றன. மத்திய அரசிடம் தேவையான நிதியை கேட்டுள்ளோம். எதிர்கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசிடம் தமிழகத்திற்கான நிதியை கேட்கவில்லை. நோயை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்வது வேதனை அளிக்கிறது. வெளிமாநிலத்தில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட நோய் கொரோனா.
மேலும் கொரோனா தொற்று மேலும் பரவாமல் இருக்க மாநில, மத்திய அரசுகள் இரண்டும் இணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி கருத்துகளை தெரிவித்தார் என கூறினார். அதன் அடிப்படையில் மருத்துவ வல்லுநர்கள், மத்திய சுகாதாரத்துறை, உலக சுகாதார அமைச்சகம் தெரிவித்த கருத்தின் அடிப்படையிலேயே நோய் தடுப்பு பணியை மேற்கொண்டு வருகிறது என கூறினார். இந்நிலையில் அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என தெரிவித்தார். கொரோனா வைரசை தடுப்பதே முக்கியம் என அரசு கருதிகிறது என கூறினார். கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார் என முதல்வர் பேட்டியளித்தார்.
கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்குதான் தமிழக அரசு அதிக முன்னூரிமை தந்து வருகிறது என தெரிவித்தார். மேலும் மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்னாதாகவே ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது என கூறினார். 12 முறை என்னுடைய தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் 3 முறை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளோம் என கூறினார். கொரோனா தடுப்பு பணிக்காக சிறப்பு மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது என கூறினார். பிரதமர் மோடி 2 முறை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார் என கூறினார்.
இந்தியாவிலேயே தமிழகம்தான் முன்னெச்சரிக்கையாக மருத்துவ உபகரணங்களை வாங்கி வைத்துள்ளது ஆதரவற்ற 54 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார். அடுத்த 3 நாட்களில் தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் இருக்காது எனவும், இன்னும் சில நாளில் ஜீரோ ஆகும் எனவும் கூறினார். ஏழை, எளிய மக்கள் வாங்கும் அளவுக்கு காய்கறிகளின் விலையை அரசு கட்டுப்படுத்தியுள்ளது என கூறினார். ஊடகதத்தில் பணிபுரிவர்களுக்கு கொரோனா ஏற்பட்டால் சிகிச்சைக்கான முழு செலவை அரசே ஏற்கும் எனவும், உயிர் சேதம் ஏற்பட்டால் குடும்பத்தினருபக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். துவரம் பருப்பு 500 மெட்ரிக் டன், மிளகு, கடுகு, சீரகம், வெந்தயம் 100 மெட்ரிக்டன் கொள்முதல் செய்து விலை உயர்வு தடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.
ஏப்.20க்கு பிறகான நடவடிக்கைகள் குறித்து நிதித்துறை செயலாளர் தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். ரம்ஜான் நோன்பு காலம் தொடங்க உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் குறித்து அரசு ஆலோசிக்க உள்ளது. தமிழக தலைமை காஜியுடன், தலைமை செயலாளர் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார். தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழங்கி வருகிறோம். உணவுப் பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வினியோகப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் அரசின் நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சிவப்பு பகுதிகளில் தற்போதைய ஊரடங்கு நடைமுறை தொடர்ந்து இருக்கும். 15 பேருக்கு அதிகமாக கொரோனா பாதித்துள்ள மாவட்டங்கள் சிவப்பு பகுதிக்குள் வரும். தமிழகத்தில் குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும். மாநிலத்துக்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. மலர்கள் வீணாவதை தடுக்க வாசனை திரவிய தொழிற்சாலைகளுடன் பேசி தீர்வு காணப்பட்டுள்ளது. விவசாயிகளின் விளைபொருட்கள் வீணாகாமல் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை. காய்கறி விலையேற்றம் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு முற்றிலும் தவறு. போன மாதம் 20 ரூபாய்க்கு விற்ற தக்காளி தற்போது 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த மாதத்தை ஒப்பிடும் போது காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது” என்றார்.
தமிழகத்தில் சிவப்பு மண்டல மாவட்டங்கள் எவை?
தமிழகத்தில் கொரோனா வைரஸூக்கு அதிகம் பாதிப்பிற்குள்ளான மாவட்டங்கள் பட்டியலை நேற்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் அதில் இடம்பிடித்துள்ளன. மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியகுமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், சேலம், நாகை ஆகிய மாவட்டங்களும் இதில் இடம் பிடித்துள்ளன.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
நாமக்கல்லில் இன்று ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் 50-ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
தமிழகத்தின் 22 மாவட்டங்களை கொரோனா தொற்று அதிகம் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தேசிய அளவில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது.
தற்போது வரை, 1267 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 15 பேர் உயிரிழந்துள்ளனர். 180 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 62 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட வாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு;
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை வெளியிடப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் -217, கோவை -127, திருப்பூர்-80, ஈரோடு-70, திண்டுக்கல் -65, நெல்லை -58 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) மட்டும் மேலும் 25 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) மட்டும் 25 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை வெளியிடப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் -217, கோவை -127, திருப்பூர்-80, ஈரோடு-70, திண்டுக்கல் -65, நெல்லை -58 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.