இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 33,050-ஆக உயர்வு; கொரோனா ஒருபுறம்; நாற்காலி ஒருபுறம்; மகாராஷ்டிராவின் முதல்வராக உத்தவ் தாக்கரே நீடிப்பாரா?

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 33,050-ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,787-லிருந்து 33,050-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,008-லிருந்து 1,074-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,797-லிருந்து 8,325-ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,000-ஐ தாண்டியது. உலகையே  ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி  கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,050 ஆக அதிகரித்துள்ளது. கடந்த  24 மணிநேரத்தில் மட்டும் 1718 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 67 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 1074 பேர் உயிரிழந்த  நிலையில், 8325 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 9915 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 432 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1593 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்த இடத்தில் 4082 பேருக்கு தொற்று பாதிப்புடன் குஜராத் மாநிலம் 2ம் இடத்தில் உள்ளது. அங்கு, 197 பேர்   உயிரிழந்துள்ள நிலையில், 527 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 2162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 27 பேர்  உயிரிழந்துள்ள நிலையில், 1210 பேர் குணமடைந்துள்ளனர்.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 38 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 29 பேர் குணமடைந்தது.
பிகாரில் 392 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 65 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 56 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 17 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 38 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 34 பேர் குணமடைந்தது.

கோவாவில் 7 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 7 பேர் குணமடைந்தது.
டெல்லியில் 3439 பேருக்கு பாதிப்பு; 56 பேர் பலி; 1092 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 310 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 209 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 2 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 495 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 369 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 2438 பேருக்கு பாதிப்பு; 51 பேர் பலி; 768 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 107 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 19 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 22 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 16 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 2 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 12 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 125 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 39 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 8 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 3 பேர் குணமடைந்தது.
நாகாலாந்தில் 0 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 357 பேருக்கு பாதிப்பு; 19 பேர் பலி; 90 பேர் குணமடைந்தது.
உத்தரகண்ட்டில் 55 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 36 பேர் குணமடைந்தது.

கர்நாடகாவில் 535 பேருக்கு பாதிப்பு; 21 பேர் பலி; 216 பேர் குணமடைந்தது.
ஜம்மு காஷ்மீரில் 581 பேருக்கு பாதிப்பு; 8 பேர் பலி; 192 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 1012 பேருக்கு பாதிப்பு; 26 பேர் பலி; 367 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 758 பேருக்கு பாதிப்பு; 22 பேர் பலி; 124 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 1332 பேருக்கு பாதிப்பு; 31 பேர் பலி; 287 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 2561 பேருக்கு பாதிப்பு; 129 பேர் பலி; 461 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 2134 பேருக்கு பாதிப்பு; 39 பேர் பலி; 510 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

இமாச்சலப்பிரதேசத்தில் 40 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 25 பேர் குணமடைந்தது.
அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 15 பேர் குணமடைந்தது.

கொரோனா ஒருபுறம்; நாற்காலி ஒருபுறம்; மகாராஷ்டிராவின் முதல்வராக உத்தவ் தாக்கரே நீடிப்பாரா?
மகாராஷ்டிராவின் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நீடிப்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜ-சிவசேனா கூட்டணிக்கு முறையே 105 மற்றும் 56 இடங்கள் என  பெரும்பான்மை பலம் கிடைத்தது. ஆனால், முதல்வர் பதவி தொடர்பான மோதல் காரணமாக இந்த கூட்டணி முறிந்தது. தொடர்ந்து, 54 இடங்களில் வெற்றி பெற்ற தேசியவாத காங்கிரஸ் மற்றும் 44 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ்  ஆகிய கட்சிகளுடன் இணைந்து மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைத்தது. மாநில முதல்வராக, கடந்த ஆண்டு நவம்பர், 28-ம் தேதி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார்.

ஆனால், இந்திய அரசியலமைப்பு சட்டப்படி மாநில முதல்வராக பதவியில் இருப்பவர் எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி.,யாக இருக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் ஆறு மாதங்களுக்குள், எம்.எல்.ஏ.,வாகவோ, எம்.எல்.சி.,யாகவோ தேர்ந்தெடுக்கப்பட  வேண்டும். ஆனால், சிவசேனா கட்சி தலைவராக மட்டுமே உத்தவ் தாக்கரே தற்போது வரை உள்ளார். இந்நிலையில், வரும் மே 27-ம் தேதியுடன், உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்று, ஆறு மாதங்கள் நிறைவு பெறுகிறது. இந்த  வேலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் காலியாக உள்ள, ஒன்பது எம்.எல்.சி., இடங்களுக்கு, கடந்த, 24-ம் தேதி, தேர்தல் நடந்த திட்டமிடப்பட்டிருந்தது. இதில், போட்டியிட்டு, எம்.எல்.சி.,யாக தேர்வு பெற உத்தவ் முடிவு செய்திருந்தார். ஆனால்,  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எம்.எல்.சி., தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த, 9ம் தேதி, மும்பையில் நடந்த மகாராஷ்டிரா அமைச்சரவை கூட்டத்தில், 'மாநில கவர்னருக்கான, இரண்டு எம்.எல்.சி., இடங்கள் ஒதுக்கீட்டில், ஒரு இடத்தில், உத்தவை நியமிக்க வேண்டும் என, கவர்னர், கோஷ்யாரிக்கு  கோரிக்கை விடுத்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம், கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும், கோரிக்கை குறித்து ஆளுநர் இன்று வரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதற்கிடையே, நேற்று மீண்டும் மாநில அமைச்சரவை கூட்டம், நடைபெற்றது. கூட்டத்தில்,முதல்வர் உத்தவ் தாக்கரேவை எம்.எல்.சி,.யாக நியமிக்க, கவர்னருக்கு, இரண்டாவது முறையாக பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் தாக்கரே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மே.,27ம் தேதிக்குள், உத்தவை, எம்.எல்.சி.,யாக ஆளுநர் நியமிக்கவில்லை என்றால், முதல்வர் பதவியிலிருந்து விலக நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad