உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா; தமிழகத்தில் பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது
உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2.17 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 217,799 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 3,136,232 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 953,245 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 56,970 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,974 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 937 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 7,027 பேர் குணமடைந்தனர்.
* தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,058 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,128 ஆக அதிகரித்துள்ளது.
* அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 59,252 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,035,454 ஆக அதிகரித்துள்ளது.
* இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 27,359 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 201,505 ஆக உயர்ந்துள்ளது.
* ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 23,822 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 232,128 ஆக அதிகரித்துள்ளது.
* பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 23,660 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165,911 ஆக அதிகரித்துள்ளது.
* பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 21,678 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 161,145 ஆக உயர்ந்துள்ளது.
* ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,877 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 92,584 ஆக அதிகரித்துள்ளது.
* பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 7,331 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,334 ஆக அதிகரித்துள்ளது.
* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,314 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 159,912 ஆக அதிகரித்துள்ளது.
* நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,566 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,416 ஆக அதிகரித்துள்ளது.
* சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,633 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,836 ஆக அதிகரித்துள்ளது.
* துருக்கியில் 2,992 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,699 பேரும், பிரேசில் நாட்டில் 5,063 பேரும், சுவீடன் நாட்டில் 2,355 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
* கனடாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,859 ஆக அதிகரித்துள்ளது. அயர்லாந்தில் 1,159 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,434 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.
ஊரடங்கு அமலில் இருந்தாலும் வேகமாக பரவுகிறது: சென்னையில் மேலும் 103 பேருக்கு கொரோனா - தமிழகத்தில் பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது
ஊரடங்கு அமலில் இருந்த போதிலும், சென்னையில் நேற்று மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
எவ்வளவுதான் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்த போதிலும், கொரோனா பரவுவதை தடுக்க முடியவில்லை. தமிழகத்தில் நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. மக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா வைரசால் ஏப்ரல் 1-ந்தேதி 110 பேர் பாதிக்கப்பட்டனர். இதுதான் இதுவரை அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது. இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் கொரோனா நோய்த்தொற்று தாக்கியவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று மட்டும் 121 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்களில் 103 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதில் 13 பேருக்கு புதிதாக முதன்மை தொற்று ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் 1 லட்சத்து 1,874 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள், 41 பரிசோதனை மையங்களுக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதில் 97 ஆயிரத்து 908 மாதிரிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்து இருக்கிறது. மேலும் 1,908 மாதிரிகள் இன்னும் பரிசோதனை செய்யப்படவில்லை.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,058 ஆக உயர்ந்து உள்ளது.
இவர்களில் 1,392 பேர் ஆண்கள், 666 பேர் பெண்கள்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில் 80 ஆண்களும், 41 பெண்களும் உள்ளனர். மருத்துவமனைகளில் 902 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 27 பேர் நேற்று சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மருத்துவமனைகளில் இருந்து இதுவரை 1,128 பேர் வீடு திரும்பி இருக்கிறார்கள்.
கொரோனா வைரசால் நேற்று புதிதாக பாதிக்கப்பட்ட 121 பேரில், சென்னையில் 7 மாத ஆண் குழந்தை உள்பட 7 குழந்தைகள் மற்றும் 96 பேரும், செங்கல்பட்டில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை உள்பட 3 குழந்தைகளும் மற்றும் 9 பேரும், கள்ளக்குறிச்சியில் ஒரு பெண் உள்பட 3 பேரும், நாமக்கல் மாவட்டத்தில் 2 பேரும், காஞ்சீபுரத்தில் ஒருவரும் அடங்குவார்கள்.
அதாவது நேற்று ஒரே நாளில் 10 குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 8 வயது சிறுவன் உள்பட 18 பேர் முதன்மை தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், 68 வயது முதியவர் ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்து இருக்கிறது.