Matrimony OTT-Platforms Jobs Coupons Business

அடுத்த 2 நாட்களுக்கு போலி சீனா ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்த வேண்டாம்; கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் குணமாக எவ்வளவு நாளாகும்?

2 நாட்களுக்கு ரேபிட் கிட்டில் பரிசோதனை செய்ய வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
கொரோனா நோய் தொற்று இருப்பதை விரைவாக கண்டறிய உதவும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ என்ற பரிசோதனை கருவிகள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டன.

கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ரேபிட் கிட் மூலம் பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், ரேபிட் கிட்டின் பரிசோதனை முடிவுகள் துல்லியமானதாக இல்லை எனக்கூறி ராஜஸ்தான் அரசு நிறுத்திவைத்தது.

இந்த நிலையில், அடுத்த இரு நாட்களுக்கு கொரோனாவைக் கண்டறிய ரேபிட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய மருத்துவ அராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. ரேபிட் கிட் கருவிகள் மாறுபட்ட முடிவுகளை காட்டுவதாக வெளியான தகவலையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

"ரேபிட் கிட் டெஸ்ட் கருவிகளின் தரத்தினை பரிசோதித்து வருகிறோம், மீண்டும் இந்தக் கருவிகளை கொண்டு சோதனையை தொடங்குவது பற்றி விரைவில் அறிவுறுத்தல் வழங்கப்படும் " என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

ரேபிட் கருவி பரிசோதனையை நிறுத்தியது ராஜஸ்தான் அரசு
பரிசோதனை முடிவுகள் துல்லியமாக கிடைக்காததால் ரேபிட் கிட் டெஸ்ட் கருவி சோதனையை ராஜஸ்தான் அரசு நிறுத்தி வைத்துள்ளது.

 கொரோனா நோய் தொற்று இருப்பதை விரைவாக கண்டறிய உதவும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ என்ற பரிசோதனை கருவிகள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ராஜஸ்தானில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் தவறான முடிவை காட்டியதால் பரிசோதனை செய்யும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. 

இது குறித்து ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை மந்திரி ரகு சர்மா கூறுகையில், “ ரேபிட் கிட் டெஸ்ட் கருவிகள் மூலம் 90 சதவீதம் துல்லிய சோதனை முடிவுகள் கிடைக்க வேண்டும். ஆனால், இந்தக்கருவிகள் மூலம் வெறும் 5 சதவீதம் மட்டுமே சரியான தகவல்கள் கிடைக்கின்றன. எனவே, ரேபிட் டெஸ்ட் சோதனையை நிறுத்தியுள்ளோம்.  இது தொடர்பான அறிக்கை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் குணமாக எவ்வளவு நாளாகும்?
பொதுவாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் குணமாக எவ்வளவு நாளாகும் என்ற சந்தேகம் இன்று பலரிடையே காணப்படுகின்றது.

கொரோனா தொற்றால் நீங்கள் எந்தளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை பொறுத்தே அதிலிருந்து குணமடைய எவ்வளவு காலம் ஆகும் என்பதைக் கூறமுடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஏனெனில் இது வயது, பாலினம் மற்றும் ஒருவரது உடல்நலப் பிரச்சனைகளையும் சார்ந்ததாகும். சிலர் இந்த நோயிலிருந்து விரைவில் மீண்டுவிடுவார்கள். மற்ற சிலருக்கு இது நீண்டகால பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும் .எந்தளவிற்கு எவ்வளவு காலம் இதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்கிறீர்களோ, அதையும் பொறுத்தே எப்போது குணமடைவீர்கள் என்பது இருக்கிறது என்று சொல்லப்படுகின்றது.

கொரொனா பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு முதலில் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்படும். சிலருக்கு இந்த அறிகுறிகளோடு, உடல் வலி, உடல் சோர்வு, தலைவலி மற்றும் தொண்டைவலி ஆகியவையும் தென்படும்.

ஆரம்பத்தில் வறட்டு இருமலே இருந்தாலும், போகப்போக சிலருக்கு சளி வரத்தொடங்கும். இதன்போது அதிக நீராகாரங்களை எடுத்துக் கொள்வது, நல்ல ஓய்வு மற்றும் பாராசிடமால் போன்ற மாதிரைகளை கொடுத்து இதனை சரிசெய்ய முடியும்.

எனவே லேசான அறிகுறிகள் இருப்பவர்கள், விரைவாக குணமடைந்துவிடுவார்கள். இருமல் சரியாக சற்று நீண்ட காலம் ஆகலாம் என்றாலும், ஒரு வாரத்திற்குள் காய்ச்சல் குறைந்துவிடும். சராசரியாக இரண்டு வாரங்களுக்குள் இத்தொற்றிலிருந்து மீண்டுவிடுவார்கள் என சீன தரவுகளை ஆராய்ந்த உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad