கோவையில் மேலும் 2 அரசு டாக்டர்களுக்கு கொரோனா அறிகுறி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 300 பேர் கோவை இ.எஸ்.ஐ. மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் 2 அரசு டாக்டர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பதால் அவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது.
கோவை மாவட்டத்தில் கோவை, மேட்டுப்பாளையம், அன்னூர், பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவை இ.எஸ்.ஐ. மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று மருத்துவ பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.
இந்தநிலையில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் சந்தேகத்துக்குரியவர்கள் உள்பட மொத்தம் 300 பேர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் அரசு ஆஸ்பத்திரியில் 254 பேரும், தனியார் ஆஸ்பத்திரிகளில் 46 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 26 பேர் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஆண்கள் 10 பேர், பெண்கள் 15 பேர், பெண் குழந்தை-1. இதுவரை நடைபெற்ற பரிசோதனை முடிவில் 41 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது. இருந்தாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். இன்னும் 107 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியது உள்ளது.
கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்த 2 டாக்டர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேலும் 2 பயிற்சி டாக்டர்களுக்கு இதற்கான அறிகுறிகள் தென்படுவதால் அவர்களுக்கும் பரிசோதனை நடைபெறுகிறது. இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.