கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திண்டாட்டம்: பாதிப்பு 29.20 லட்சத்தை தாண்டியது; Rapid சோதனை கருவிகள் குறித்து புகார்; இந்தியாவுடன் விசாரணைக்கு ஒத்துழைக்க தயார் - சீன நிறுவனங்கள்

கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திண்டாட்டம்: பாதிப்பு 29.20 லட்சத்தை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 203,269 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 2,920,905 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 836,683 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 57,864 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 203,269 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 2,920,905 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 836,683 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 57,864 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,942 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 779 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 5,210 பேர் குணமடைந்தனர். 

* தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,821 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 960 ஆக அதிகரித்துள்ளது.

* அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 54,256 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 960,651 ஆக அதிகரித்துள்ளது.

* இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 26,384 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 195,351 ஆக உயர்ந்துள்ளது.

* ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 22,902 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223,759 ஆக அதிகரித்துள்ளது.

* பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 22,614 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 161,488 ஆக அதிகரித்துள்ளது.

* பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 20,319 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 148,377 ஆக உயர்ந்துள்ளது.

* ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,650 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89,328 ஆக அதிகரித்துள்ளது.

* பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,917 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,325 ஆக அதிகரித்துள்ளது.

* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,877 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 156,513ஆக அதிகரித்துள்ளது.

* நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,409 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,190 ஆக அதிகரித்துள்ளது.

* சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,632 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,827 ஆக அதிகரித்துள்ளது.

* துருக்கியில் 2,706 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,599 பேரும், பிரேசில் நாட்டில் 4,057 பேரும், சுவீடன் நாட்டில் 2,192 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

* கனடாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,465 ஆக அதிகரித்துள்ளது. அயர்லாந்தில் 1,063 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,305 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.

சோதனை கருவிகள் குறித்து புகார்; இந்தியாவுடன் விசாரணைக்கு ஒத்துழைக்க தயார் - சீன நிறுவனங்கள் அறிவிப்பு
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட துரித சோதனை கருவிகள் துல்லியமாக இல்லை என்ற புகார் இங்கு எழுந்துள்ளது. இது குறித்த விசாரணையில் இந்தியாவுடன் ஒத்துழைக்க தயார் என அவற்றை ஏற்றுமதி செய்த சீன நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

வளர்ந்த உலக நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடுகையில் இங்கு கொரோனா வைரஸ் தாக்கத்தின் அளவு குறைவாகவே இருக்கிறது. அதே நேரத்தில் இங்கு பரிசோதனை வசதிகளும் குறைவாகவே இருக்கின்றன. இதனால் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு பரிசோதனை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அந்த வகையில் விரைவான முதல் கட்ட சோதனைக்கு உதவுகிற ரேபிட் டெஸ்ட் கிட் என்று அழைக்கப்படுகிற 5½ லட்சம் துரித சோதனை கருவிகளை சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது.

சீனாவின் குவாங்சோ வோண்ட்போ பயோடெக் நிறுவனம் 3 லட்சம் கருவிகளையும், லிவ்சான் டயாக்னஸ்டிக்ஸ் நிறுவனம் 2½ லட்சம் கருவிகளையும் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தன.

ஆனால் இந்தக் கருவிகள் துல்லியமாக செயல்படவில்லை, அவை முழுமையாக செயல்படவும் இல்லை என பரவலாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து துரித சோதனை கருவிகளை பயன்படுத்துவதை நிறுத்தி வைக்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐ.சி.எம்.ஆர். கேட்டுக்கொண்டது.

இந்த நிலையில்தான் தாங்கள் வினியோகம் செய்த துரித சோதனை கருவிகளின் தரம் தொடர்பாக இந்திய விசாரணை அமைப்புகளுடன் ஒத்துழைக்க தயார் என சீன நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

குவாங்சோ வோண்ட்போ பயோடெக் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

70-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு துரித சோதனை கருவிகளை நாங்கள் ஏற்றுமதி செய்துள்ளோம். எங்கள் தயாரிப்பை புனே தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் மூலம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மதிப்பிட்டு ஏற்றுக்கொண்டது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணியில், எங்கள் நிறுவனம் ஒவ்வொரு நாட்டின் தொடர்புடைய சுகாதார அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைக்கிறது. இநதியாவுடனும் ஒத்துழைக்க தயார். எங்கள் தயாரிப்புகளின் உணர்திறன் மற்றும் தனித்தன்மை பற்றி பல்வேறு சரிபார்ப்புகளை நாடுகள் மேற்கொள்கின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு நிறுவனமான லிவ்சான் டயாக்னஸ்டிக்ஸ் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

எங்கள் துரித சோதனை கருவிகளின் முடிவுகள் துல்லியமாக இல்லை என்று இந்தியாவில் இருந்து வந்துள்ள புகார்களைக் கண்டு அதிர்ச்சி அடைகிறோம். இதில் நாங்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையின் விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைக்க விருப்பம் கொண்டுள்ளோம். எங்கள் கருவிகளைப் பொறுத்தமட்டில் அவற்றை 2 டிகிரி முதல் 30 டிகிரி செல்சியசுக்குள் வெப்ப நிலை உள்ள இடத்தில் வைக்க வேண்டும். அவை உறையக்கூடாது. கருவிகளை வைக்கிற அறையின் வெப்ப நிலை மிக அதிகளவில் இருந்தால், அது பரிசோதனையின் துல்லியத்தில் பாதிப்பை உண்டாக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைகளை டெல்லியில் உள்ள சீன தூதரகம் நேற்று வெளியிட்டுள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad