Matrimony OTT-Platforms Jobs Coupons Business

கொரோனா தொற்று ஏற்பட்டு 28 நாட்களுக்கு பிறகும் அறிகுறிகள் தெரியுமா? 4 நாள் ஊரடங்கு முன்யோசனையற்ற நிர்வாகத்தை காட்டுகிறது: மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கையாக எந்த தொற்றுநோயாக இருந்தாலும் இரட்டை தனிமைப்படுத்தல் காலம் கடைப்பிடிக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரியில் பாதிக்கப்பட்ட முதல் நபர் மைசூர் சென்று திரும்பி 34 நாட்கள் கழித்து வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தமிழக சுகாதார அதிகாரிகளை குழப்பமடைய செய்துள்ளது.

கொரோனா கிருமி மனித உடலில் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிவதற்கு அதிகபட்சமாக 14 நாட்கள் ஆகும் என்பதுதான் உலகம் முழுவதும் உள்ள புரிதல். இது தான் இன்குபேஷன் காலமாகும். அறிகுறிகள் வருவதற்கு முன்னாலேயே ஒருவர் அந்த வைரஸை மற்றவருக்கு பரப்ப முடியும் என்பதால் தான் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கையாக எந்த தொற்றுநோயாக இருந்தாலும் இரட்டை தனிமைப்படுத்தல் காலம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி நோய் தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என கருதப்படுவர்கள் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனையின் தொற்று நோய்கள் மருத்துவர் செந்தூர் நம்பி கூறுகையில், " 30 நாட்களுக்கு பிறகும் ஒருவர் உடலில் வைரஸ் அறியப்படுவதற்கு இறந்த வைரஸ் செல்கள் காரணமாக இருக்கலாம். பி.சி.ஆர் பரிசோதனை நமக்கு வைரஸ் உள்ளதா என்பதைத்தான் காட்டும், அதன் வீரியத்தை அல்ல. இதனால் குழப்பம் வர வாய்ப்புண்டு. அல்லது உள்ளூர் அளவில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டதா என அறிய வேண்டும்" என்கிறார் மருத்துவர்.

இதற்கு முன் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் 28 நாட்களுக்கும் மேல் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு அதே பகுதியில் உள்ள மற்றவர்களிடமிருந்து வந்திருக்க வாய்ப்பிருக்கக் கூடும் என கருதப்பட்டது. ஆனால் கிருஷ்ணகிரியில் நேற்று தொற்று கண்டறியப்பட்டவர் தான் முதல் பாதிக்கப்பட்ட நபர் என்பதால் குழப்பத்தை அதிகரித்துள்ளது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 34 நாட்கள் ஆன பிறகும் புதிய தொற்றுகள் ஏற்பட்டுக் கொண்டு தான் உள்ளன. உள்ளூர் போக்குவரத்தை தவிர வேறு எந்த பயணம் மேற்கொள்ள முடியாத நிலையில் புதிய தொற்றுகள் எப்படி ஏற்படுகின்றன என்பதற்கு விளக்கம் தரப்படுவதில்லை. சமூகத் தொற்று நிலையை இந்த நோய் எட்டியிருக்கக் கூடும் என சில சுகாதார வல்லுனர்கள் சந்தேகிக்கின்றனர். கொரோனா பாதிக்கப்பட்ட 80% பேருக்கு அறிகுறிகள் இருக்காது. ஆனால் இவர்களிடம் இருந்து நோய் பரவும் சாத்தியம் உண்டு. அப்படி நடக்கும் வாய்ப்பை நாம் ஒதுக்க முடியாது.மாநிலம் முழுவதும் கடந்த 14 நாட்களில் 852 பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் 717 பேருக்கு நோய் யாரிடம் இருந்து பரவியது என தெரியவந்துள்ளது. ஆனால் மற்ற 135 பேர் புதிதாக அறியப்பட்ட முதன்மைத் தொற்றாளர்கள் ஆவர். அதாவது இவர்கள் ஏற்கனவே தொற்று பெற்ற யாராலும் நோய்க்கு ஆளானவர்கள் அல்ல.

ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 21ம் நாளில், அதாவது ஏப்ரல் 12ம் தேதி 16 பேருக்கு புதிய நேரடி தொற்று ஏற்பட்டிருந்தது.

ஊரடங்கின் 21ம் நாள் ஏப்ரல் 12  -16 பேர்
ஊரடங்கின் 22ம் நாள் ஏப்ரல் 13 -9 பேர்
ஊரடங்கின் 23ம் நாள் ஏப்ரல் 14-  1ஒன்று
ஊரடங்கின் 24ம் நாள் ஏப்ரல் 15 - 16 பேர்
ஊரடங்கின் 25ம் நாள் ஏப்ரல் 16 - 7 பேர்
ஊரடங்கின் 26ம் நாள் ஏப்ரல் 17 - 15 பேர்
ஊரடங்கின் 27ம் நாள் ஏப்ரல் 18.  - 0
ஊரடங்கின் 28ம் நாள் ஏப்ரல் 19  - 13 பேர்
ஊரடங்கின் 29ம் நாள் ஏப்ரல் 20 - 12 பேர்
ஊரடங்கின் 30ம் நாள் ஏப்ரல் 21  - 5 பேர்
ஊரடங்கின் 31ம் நாள் ஏப்ரல் 22  - 3 பேர்
ஊரடங்கின் 32ம் நாள் ஏப்ரல் 23 -  17 பேர்
ஊரடங்கின் 33ம் நாள் ஏப்ரல் 24 - 13 பேர்
ஊரடங்கின் 34ம் நாள் ஏப்ரல் 25. - 8 பேர்

இந்த 14 நாட்களில் ஏற்பட்ட மொத்த பாதிப்புகளில் 15.8% நேரடி புதிய பாதிப்புகளாகும். இந்த பாதிப்புகள் குறித்த விரிவான விபரம் எதுவும் சுகாதாரத்துறை செய்திக் குறிப்பில் இல்லை.

இதில், சென்னையில் தான் அதிகமான நேரடி பாதிப்புகள் உள்ளன.

சென்ன்னை - 42
செங்கல்பட்டு - 2
காஞ்சிபுரம் - 1
திருவண்ணாமலை  - 1
ராமநாதபுரம் - 5
நாகப்பட்டினம் - 8
தூத்துக்குடி  - 1
திருவாரூர். -  1
தஞ்சாவூர்.  - 11
கள்ளக்குறிச்சி.  - 2
திருச்சி.  - 3
பெரம்பலூர்  - 3
கோவை. - 4
திருப்பூர்.-  3
சேலம் - 6
தரும்புரி.  - 1
மதுரை -  11
விருதுநகர். - 3
திண்டுக்கல் - 2
சிவகங்கை -  1
விழுப்புரம் - 4
கடலூர் - 4
ஈரோடு - 2
நாமக்கல்  - 3
தென்காசி - 1
தேனி - 1
நெல்லை - 1
திருவள்ளூர்- 8

4 நாள் ஊரடங்கு என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தது முன்யோசனையற்ற நிர்வாகத்தை காட்டுகிறது: மு.க.ஸ்டாலின்
4 நாள் ஊரடங்கு என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தது முன்யோசனையற்ற நிர்வாகத்தை காட்டுகிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வரின் முன்யோசனையற்ற அறிவிப்பால் மக்கள் பதற்றமடைந்து கடைகளில் குவிந்துவிட்டனர். பெருங்கூட்டம் கூடியதால் ஊரடங்கு நோக்கமே சிதைந்து சின்னாபின்னமாகிவிட்டது என ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad