Matrimony OTT-Platforms Jobs Coupons Business

உலக நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,500-ஐ தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 206,988 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். 
உலகம் முழுவதும் கொரோனாவால் 2,994,722 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 878,707 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 57,602 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,917 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 826 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 5,914 பேர் குணமடைந்தனர்.
 
* தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,885 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1020 ஆக அதிகரித்துள்ளது.

* அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 55,413 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 987,160 ஆக அதிகரித்துள்ளது.

* இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 26,644 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 197,675 ஆக உயர்ந்துள்ளது.

* ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 23,190 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 226,629 ஆக அதிகரித்துள்ளது.

* பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 22,856 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 162,100 ஆக அதிகரித்துள்ளது.

* பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 20,732 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 152,840 ஆக உயர்ந்துள்ளது.

* ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,710 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,481 ஆக அதிகரித்துள்ளது.

* பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 7,094 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,134 ஆக அதிகரித்துள்ளது.

* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,976 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 157,770 ஆக அதிகரித்துள்ளது.

* நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,475 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,845 ஆக அதிகரித்துள்ளது.

* சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,633 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,830 ஆக அதிகரித்துள்ளது.

* துருக்கியில் 2,805 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,610 பேரும், பிரேசில் நாட்டில் 4,286 பேரும், சுவீடன் நாட்டில் 2,194 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

* கனடாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,560 ஆக அதிகரித்துள்ளது. அயர்லாந்தில் 1,087 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,351 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,500-ஐ தாண்டியது; 872 பேர் பலி
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,500-ஐ தாண்டியது. உலகையே  ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும்  காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி  கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,892 ஆக அதிகரித்துள்ளது. கடந்த  24 மணிநேரத்தில் மட்டும் 1392 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 48 பேர் உயிரிழந்துள்ளதாகவும்  மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 872 பேர் உயிரிழந்த   நிலையில், 6,185 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 8068 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி   செய்யப்பட்டுள்ளது. இதுவரை 342 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1076 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்த  இடத்தில் 3031 பேருக்கு தொற்று பாதிப்புடன் குஜராத் மாநிலம் 2ம் இடத்தில் உள்ளது. அங்கு, 151 பேர்  உயிரிழந்துள்ள  நிலையில், 313 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 6-வது இடத்தில்    உள்ளது. தமிழகத்தில் 1885 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 24 பேர்   உயிரிழந்துள்ள நிலையில், 1020 பேர் குணமடைந்துள்ளனர்.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 36 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 27 பேர் குணமடைந்தது.

பிகாரில் 274 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 56 பேர் குணமடைந்தது.

சண்டிகரில் 30 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 17 பேர் குணமடைந்தது.

சத்தீஸ்கரில் 37 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 32 பேர் குணமடைந்தது.

கோவாவில் 7 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 7 பேர் குணமடைந்தது.

டெல்லியில் 2918 பேருக்கு பாதிப்பு; 54 பேர் பலி; 877 பேர் குணமடைந்தது.

அரியானாவில் 289 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 176 பேர் குணமடைந்தது.

திரிபுராவில் 2 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 458 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 338 பேர் குணமடைந்தது.

ராஜஸ்தானில் 2185 பேருக்கு பாதிப்பு; 33 பேர் பலி; 518 பேர் குணமடைந்தது.

ஜார்கண்டில் 82 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 13 பேர் குணமடைந்தது.

லடாக்கில் 20 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 14 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 2 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.

மேகலாயாவில் 12 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.

மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.

ஒடிசாவில் 103 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 35 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 7 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 3 பேர் குணமடைந்தது.

நாகாலாந்தில் 0 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.

பாஞ்சாப்பில் 313 பேருக்கு பாதிப்பு; 18 பேர் பலி; 71 பேர் குணமடைந்தது.

உத்தரகண்ட்டில் 50 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 28 பேர் குணமடைந்தது.

கர்நாடகாவில் 503 பேருக்கு பாதிப்பு; 19 பேர் பலி; 182 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 523 பேருக்கு பாதிப்பு; 6 பேர் பலி; 137 பேர் குணமடைந்தது.

தெலுங்கானாவில் 1002 பேருக்கு பாதிப்பு; 26 பேர் பலி; 280 பேர் குணமடைந்தது.

மேற்கு வங்கத்தில் 649 பேருக்கு பாதிப்பு; 20 பேர் பலி; 105 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 1097 பேருக்கு பாதிப்பு; 31 பேர் பலி; 231 பேர் குணமடைந்தது.

மத்தியப்பிரதேசத்தில் 2096 பேருக்கு பாதிப்பு; 103 பேர் பலி; 302 பேர் குணமடைந்தது.

உத்தரப்பிரதேசத்தில் 1868 பேருக்கு பாதிப்பு; 29 பேர் பலி; 289 பேர் குணமடைந்தது.

அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

இமாச்சலப்பிரதேசத்தில் 40 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 22 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 11 பேர் குணமடைந்தது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad