இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 26917- ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26917 ஆக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் தனது கோர முகத்தை காட்டி வரும் கொரோனா, லட்சக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கி உள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவையே ஆட்டம் காண செய்துவிட்ட இந்த வைரசை கட்டுப்படுத்த இந்தியாவில் நாடு முழுவதும் 40 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,917-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து இதுவரை 5,914 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பிய நிலையில் தொற்று காரணமாக இதுவரை 826 பேர் உயிரிழந்துள்ளனர்.

சரியான நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைப்போல இந்தியாவில் இந்த வைரசால் அதிக பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை. ஆனாலும் கொரோனா தன்னால் முடிந்தவரை இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாடு தழுவிய ஊரடங்கு மட்டுமின்றி, மாநிலங்களும் 144 தடை உத்தரவு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. ஆனாலும் கொரோனாவுக்கு முழுமையான கடிவாளம் போட முடியவில்லை. எனவே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்துவிட்டது.

இந்தியாவிலும் கொரோனா தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 26917 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1975 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து  5914 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 826 ஆக உயர்ந்துள்ளது. மாநில அளவில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 7628 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  குஜராத்தில் 3071 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் 2625 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad