ஈரோட்டில் ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா! தமிழக மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம் வெளியீடு
தமிழகத்திலேயே அதிக அளவாக ஈரோட்டில் இன்று 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
full-width
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது 89 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738-லிருந்து 834-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட வாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு;
* புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்னும் கொரோனா பாதிப்புகள் ஏற்படவில்லை.
இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738-லிருந்து 834-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட வாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு;
மாவட்டம் | கொரோனவால் பாதிக்கப்பட்டோர் |
சென்னை | 163 |
கோவை | 60 |
திண்டுக்கல் | 46 |
திருநெல்வேலி | 56 |
ஈரோடு | 58 |
நாமக்கல் | 41 |
ராணிப்பேட்டை | 27 |
தேனி | 40 |
கரூர் | 23 |
செங்கல்பட்டு | 28 |
மதுரை | 25 |
திருச்சி | 36 |
விழுப்புரம் | 20 |
திருவாரூர் | 13 |
சேலம் | 14 |
திருவள்ளூர் | 13 |
விருதுநகர் | 11 |
தூத்துக்குடி | 22 |
நாகப்பட்டினம் | 12 |
திருப்பத்தூர் | 16 |
கடலூர் | 13 |
திருவண்ணாமலை | 9 |
கன்னியாகுமரி | 14 |
சிவகங்கை | 5 |
வேலூர் | 11 |
தஞ்சாவூர் | 11 |
காஞ்சிபுரம் | 6 |
நீலகிரி | 4 |
திருப்பூர் | 26 |
ராமநாதபுரம் | 2 |
கள்ளக்குறிச்சி | 3 |
பெரம்பலூர் | 1 |
அரியலூர் | 1 |
தென்காசி | 3 |