Matrimony OTT-Platforms Jobs Coupons Business

கடந்த 24 மணி நேரத்தில் ஊரடங்கை மீறியதாக 9,393 வாகனங்கள் பறிமுதல்; ரூ.45 லட்சம் அபராதம் வசூல் - தமிழக காவல்துறை அறிக்கை

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,412 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 199 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் இறங்கி உள்ளது. இந்தியா உள்ளிட்ட 205 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

full-width இதற்கிடையே, ஊரடங்கு உத்தரவு காரணமாக நாட்டு மக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். அத்தியவாசிய பொருட்கள் விற்பனையாகும் பால், காய்கறி, இறைச்சி, மீன், மருத்தகம் உள்ளிட்ட கடைகளுகள் கட்டுப்பாடுடன் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அவசியமின்றி வெளியை சுற்றித்திரியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது விதமாக காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அவசியமின்றி சுற்றித்திரியும் பொதுமக்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.  பொதுமக்கள் வெளியை வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1,35,734 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர்களில் 1,25,708 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 1,06,539 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறயவர்களிடமிருந்து ரூ.45,13,544 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad