Matrimony OTT-Platforms Jobs Coupons Business

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1229 பேருக்கு கொரோனா; குணமாகிய பலருக்கும் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு;

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1229 பேருக்கு கொரோனா: 14 நாட்களில் 78 மாவட்டங்களில் புதிதாக பாதிப்பு இல்லை: மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் கடந்த 24  மணி நேரத்தில் 1409 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 21,700-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 14 நாட்களில் 78 மாவட்டங்களில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏதும் பதிவாகவில்லை என்று தெரிவித்துள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மும்பையில் தமிழர்கள் அதிகம் வாழும் தாராவியில் இன்று கொரோனாவால் 25 பேர் பாதிப்பு; ஒருவர் உயிரிழந்துள்ளார். தாராவியில் இதுவரை 214 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறியதாவது; இந்தியாவில் கொரோனாவால் கடந்த 24  மணி நேரத்தில் 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 686-ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வருவோரின் விகிதம் 19.89  சதவீதமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டது. கடந்த 14 நாட்களில் 78 மாவட்டங்களில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏதும் பதிவாகவில்லை.

சீனாவில் குணமாகிய பலருக்கும் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு
சீனாவில் குணமாகிய பலருக்கும் மீண்டும் கொரோனா வைரஸ் உள்ளதாக சோதனையில் தெரியவந்துள்ளது.

சீனாவின்  உகான நல்கரில் டிசம்பர் மாதத்தில் கொரோனா தொடங்கிய உடன்  மருத்துவர்கள், நோயாளிகள் என அனைவரையும் அதில் இருந்து மீட்கும் முயற்சியாக பலருக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்படி சிகிச்சை அளிக்கப்பட்ட பலருக்கு ஒரு கட்டத்தில் கொரோனா இல்லை என்று சோதனையில் வந்தது. இதையடுத்து குணம் அடைந்ததாக அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால் கொரோனா வைரஸில் இருந்து குணமாகிய பலருக்கு 70 நாட்களுக்குப் பிறகு எந்த அறிகுறிகளும் இல்லாத நிலையில் மீண்டும் சோதனை செய்து பார்த்த போது கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இது சீன அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமான பின்னரும் எந்த அறிகுறியும் இல்லாமல் உடலில் கொரோனா இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது போல் பாதிக்கப்பட்ட நிலையில் எத்தனை கொரோனா வைரஸ் நோயாளிகள் இருக்கிறார்கள் என்பது குறித்து சீன அதிகாரிகள் சரியான தகவல்களை இதுவரை வெளியிடவில்லை, ஆனால் ராய்ட்டர்ஸ் மற்றும் பிற ஊடகங்களால் பெறப்பட்ட சீன மருத்துவமனைகளின் தகவல்களின் படி குறைந்தது டஜன் கணக்கானவர்கள் இருப்பதாக தெரிவிக்கின்றன.

சீன சுகாதார அதிகாரிகள் கூற்றுப்படி, இப்படி மீண்டும் கொரோனா வைரஸ் உள்ளதாக சோதனையில் தெரியவந்த எவரும் மற்றவர்களுக்கு தொற்றை பரப்பியதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

ஆனால் பிற நாடுகளில் உள்ள சுகாதார அதிகாரிகளிடையே இந்த சம்பவம் கவலையை அதிகரித்துள்ளது. அத்துடன் உலகளவில் பரிந்துரைக்கப்பட்ட 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் மீதும் சந்தேகம் எழுப்பபட்டுள்ளது. ஏனெனில் தென் கொரியாவில், சுமார் 1,000 பேருக்கு நான்கு வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு பின்னர் கொரோனா பாசிட்டிவ் இருப்பது தெரியவந்துள்ளது.அதே நேரத்தில் இத்தாலியில் நோயாளிகளுக்கு ஒரு மாதத்திற்கும் அதிகமான நாட்களுக்கு பின்னர் கொரோனா பாசிட்டிவ் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

குணம் அடைந்த நோயாளிகளுக்கு 60 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கவலைகளை அதிகரிக்கும் அதேசமயம், குணம் அடைந்த நோயாளிகளின் உடற்பாகங்களில் கொரோனா தங்கியிருக்கக் கூடும் என்பதால் அவர்கள் மீண்டும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஆனால் அது பெரிய அளவில் ஆபத்தை ஏற்படுத்தாது என்றும் தென்கொரியா மருத்துவ ஆராய்ச்சி ஆராய்ச்சியாளார்கள் தெரிவித்துள்ளனர்.

100 நாள் வேலை திட்டத்துக்கு அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
நீர்ப்பாசனம், நீர் சேமிப்பு, அணை பாதுகாப்பு திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகளை செயல்படுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு அனுமதி அளித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், குறிப்பிட்ட சில பணிகளை மேற்கொள்வதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, கட்டுப்பாட்டு மண்டலம் இல்லாத பகுதிகளில், நூறு நாள் வேலை திட்டப் பணிகளை தொடர்வதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. முகக்கவசங்கள் மற்றும் தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்து பணியாற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுமட்டுமின்றி கிராமப்புறங்களில், நீர்ப்பாசனம், நீர் சேமிப்பு, அணை பாதுகாப்பு திட்டங்களுக்கான கட்டுமானப் பணிகளை செயல்படுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாலை, மேம்பாலம், நீர்விநியோகம், செங்கல் சூளை பணிகளை மேற்கொள்ளலாம் என்றும், மாநில, மத்திய அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad