பீகாரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 23 பேருக்கு கொரோனா பாதிப்பு
பீகாரில் கொரோனா பாதித்த 60 பேரில், 23 பேர் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பாட்னாவில் இருந்து 130 கி.மீ தொலைவில் உள்ள சிவான் மாவட்டத்தில் கிட்டதட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சங்கிலி தொடரானது, கடந்த மாதம் ஓமனில் இருந்து திரும்பிய நபரால் ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச்.16ம் தேதி சிவான் மாவட்டத்தில் உள்ள பன்ஜ்வார் கிரமத்திற்கு திரும்பிய அந்த நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது ஏப்.4ம் தேதியே தெரியவந்தது.
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவதற்கு முன்பு, அவர் சிவான் மாவட்டத்தில் உள்ள உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றிருந்தார். அவரது சொந்த கிராமமான பன்ஜ்வாரை சேர்ந்த 22 உறவினர்கள் மற்றும் 2 பேருக்கு கொரோனா பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுடன், சிவான் மாவட்டத்தில் மட்டும் 31 பேரை கொரோனா உறுதிப்படுத்தியுள்ளது. 23 பேரில் 4 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், அவர்கள் மேலும், 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, சிவான் மாவட்ட எல்லை பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.