கொரோனா பாதிப்பில் 22-வது இடத்தை பிடித்தது இந்தியா; கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,447-ஆக உள்ளது.

144 அறிவிப்புக்கு முன் 60 நாடுகளுக்கு பின்னால் இருந்து இந்தியா தற்போது 22-து இடத்தை பிடித்தது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,447, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 239-ஆக உயர்வு
சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியா 22-வது இடத்தை எட்டியுள்ளது. ஊரடங்கு அறிவிப்புக்கு முன் 60 நாடுகளுக்கு பின்னால் இருந்து இந்தியா தற்போது 22-வது இடத்தில் உள்ளது. 


இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,761-லிருந்து 6,412-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 206-லிருந்து 239-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 514-லிருந்து 643-ஆக உயர்ந்துள்ளது.
full-width
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url