தூத்துக்குடியில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆக உயர்வு
தூத்துக்குடியில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே 24 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் ஒரு மூதாட்டி பரிதாபமாக இறந்தார். மீதமுள்ளவர்களில் 18 பேர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியிலும், 5 பேர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு, அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். அவர்களது சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதில் நேற்று சிலரின் பரிசோதனை முடிவுகள் வந்தன.
அதில் தூத்துக்குடி போல்டன்புரத்தை சேர்ந்த மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இவர்கள் கொரோனா தாக்கி இறந்த மூதாட்டியுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்து உள்ளது.
கொரோனா தொற்று அதிகரிப்பு: 90 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் வீடு, வீடாக பரிசோதனை
கொரோனா தொற்று அதிகரித்துள்ளதை தொடர்ந்து 90 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் வீடு, வீடாக பரிசோதனை மேற்கொண்டனர்.
திருப்பூர் குமரானந்தபுரம் பகுதியில் செவிலியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. குமரானந்தபுரம் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது. வழக்கமாக ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், டாக்டர்கள் 50 பேர் கொண்ட குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்வது வழக்கம்.
கொரோனா தொற்று அதிகம் பரவி வருவதால் நேற்று மேட்டுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து செவிலியர்கள், டாக்டர்கள் என 90 பேர் கொண்ட குழுவினர் குமரானந்தபுரம் பகுதியில் வீடு, வீடாக சென்று அங்குள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். காய்ச்சல், சளி பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்களா? என்று சோதனை மேற்கொண்டனர்.