திருப்பூரில் ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா! தமிழக மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம் வெளியீடு

தமிழகத்திலேயே அதிக அளவாக திருப்பூரில் இன்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
 தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1075-லிருந்து 1173-ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்  தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78-ஆக உயர்வு

திருப்பூரில் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 78-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

தமிழகத்தில் இன்று மட்டும் 98 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

இன்று 98 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,173 ஆக உயர்வு

மொத்தம் 58 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்

தமிழகத்தில் அரசு ஆய்வகங்கள் 25, தனியார் ஆய்வகங்கள் 9 உள்ளன

சென்னையில் மேலும் 9 பேருக்கு வைரஸ் தொற்று - மொத்த எண்ணிக்கை 208 ஆக அதிகரிப்பு

கரூர் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு வைரஸ் பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 40 ஆக உயர்வு

மதுரையில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மொத்த எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் 34 மாவட்டங்களில் மொத்தம் 1,173 பேர் வைரஸ் தொற்றால் பாதிப்பு

கோவையில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 126 ஆக அதிகரிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 17 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட வாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு;
மாவட்டம் கொரோனவால் பாதிக்கப்பட்டோர்  12.04.2020 வரை 13.04.2020 மொத்தம்
சென்னை 196 9 208
கோவை 119 7 126
திருப்பூர் 60 18 78
ஈரோடு 64 64
திண்டுக்கல் 56 56
திருநெல்வேலி  56 56
நாமக்கல் 45 45
செங்கல்பட்டு 43 2 45
திருச்சி 43 43
தேனி 41 41
கரூர் 25 15 40
ராணிப்பேட்டை 39 39
மதுரை 25 14 39
திருவள்ளூர் 29 4 33
நாகப்பட்டினம் 24 5 29
தூத்துக்குடி 24 2 26
விழுப்புரம் 23 23
கடலூர் 19 19
சேலம் 17 17
திருப்பத்தூர் 16 1 17
விருதுநகர் 11 6 17
திருவாரூர் 13 3 16
வேலூர் 12 4 16
கன்னியாகுமரி 15 15
திருவண்ணாமலை 11 1 12
தஞ்சாவூர் 11 11
சிவகங்கை 6 4 10
நீலகிரி 9 9
காஞ்சிபுரம் 8 8
தென்காசி 5 5
ராமநாதபுரம் 2 3 5
கள்ளக்குறிச்சி 3 3
அரியலூர் 1 1
பெரம்பலூர் 1 1
மொத்தம் 1075 98 1173
தமிழகத்தில் சமூகப் பரவல் இல்லை. இரண்டாவது நிலையில் தான் உள்ளோம்.  கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் குடும்பத்திற்கு சோதனை செய்யப்படுகின்றது என்று தெரிவித்தார்.

மாவட்ட வாரியாக பார்க்கையில் திருப்பூரில் இன்று அதிகபட்சமாக 18 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அடுத்ததாக கரூரில் 15 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மொத்தமாக பாதிப்பு எண்ணிக்கையை கணக்கிட்டால் சென்னையில் 205 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக கோவையில் 126 பேரும், ஈரோட்டில் 64 பேரும் திருப்பூரில் 78 பேரும், நெல்லையில் 56 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
Please disable your adblocker to access this website.
[ ? ]