கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என உறுதிப்படுத்தப்பட முடியாத நிலையில் 17 பேர்; சென்னை தனியார் மருத்துவமனையில் பெண் மருத்துவருக்கு கொரோனா
17 பேருக்கும் கொரோனா பாதித்தவர்களுடனான நேரடித் தொடர்பு இல்லாத சூழல் உள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா கண்டறியப்பட்ட 54 பேரில் 17 பேருக்கு தொற்று எப்படி ஏற்பட்டது என்று தெரியாத சூழல் உள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ‘தமிழகத்தில் இன்று மட்டும் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 90 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது.
அதன்மூலம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 752 ஆக அதிகரித்துள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று தொற்று கண்டறியப்பட்ட 54 பேரில் 17 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என தெளிவாக கூற முடியாத நிலை உள்ளது. 17 பேருக்கும் கொரோனா பாதித்தவர்களுடனான நேரடித் தொடர்பு இல்லாத சூழல் உள்ளது. இவர்களில் 6 பேர் சென்னை, ஒருவர் செங்கல்பட்டு, தருமபுரி ஒருவர், மதுரையில் இருவர், நாமக்கல்லில் ஒருவர், சேலத்தில் நான்கு பேர், திருப்பூரில் ஒருவர், விழுப்புரத்தைச் சேர்ந்த ஒருவர் ஆவர்.
கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் பலி; தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு
சென்னையில் இதுவரை மொத்தம் 400 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சென்னையில் கொரோனா வைரஸால் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குணமடைந்து உள்ளவர்கள் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக ராயபுரத்தில் 118 பேரும், தடையார்பேட்டையில் 56 பேரும், திருவிக நகரில் 49 பேரும், தேனாம்பேட்டையில் 45 பேரும், கோடம்பாக்கத்தில் 36 பேரும், அண்ணாநகரில் 35 பேரும் உள்ளனர்.
மேலும், திருவொற்றியூரில் 13 பேரும், வளசரவாக்கத்தில் 13 பேரும், அடையாறில் 10 பேரும், ஆலந்தூரில் 9 பேரும், பெருங்குடியில் 8 பேரும், மாதவரத்தில் 3 பேரும், சோழிங்கநல்லூரில் 2 பேரும், அம்பத்தூரில் 1 நபரும், மணலியில் 1 நபரும் உள்ளனர்.
சென்னையில் ஆண்கள் 64.91% பேரும், பெண்கள் 35.09% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வயது வாரியாக பார்க்கும் போது, அதிகபட்சமாக 30 முதல் 39 வயது வரை உள்ள நபர்கள் 88 பேருக்கும், 20 முதல் 29 வயது வரை உள்ள நபர்களில் 80 பேருக்கும் தொற்று உள்ளது. குறைந்தபட்சமாக 9 வயதுக்கு கீழ் நேற்று புதிதாக 4 நபருக்கு பாதிப்பு ஏற்பட்டு மொத்தம் 8 பேரும், 80 வயதுக்கு மேல் 8 பேரும் பாதித்து உள்ளனர்.
10 முதல் 19 வயதுள்ளோர் 27 பேருக்கும், 40 முதல் 49 வயதுள்ளோர் 70 பேருக்கும், 50 முதல் 59 வயதுள்ளோர் 66 பேருக்கும், 60 முதல் 69 வயதுள்ளோர் 35 பேருக்கும், 70 முதல் 79 வயதுள்ளோர் 17 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
மண்டலம் - மொத்தம் - உயிரிழந்தவர்கள் - குணமடைந்தவர்கள்திருவொற்றியூர் - 13 - 0 - 2
மணலி - 1 - 0 - 0
மாதவரம் - 3 - 0 - 3
தண்டையார்பேட்டை - 56 - 1 - 7
ராயபுரம் - 118 - 5 - 28
திருவிக நகர் - 49 - 1 - 19
அம்பத்தூர் - 1 - 0 - 0
அண்ணாநகர் - 35 - 2 - 10
தேனாம்பேட்டை - 45 - 0 - 7
கோடம்பாக்கம் - 36 - 0 - 16
வளசரவாக்கம் - 13 - 0 - 4
ஆலந்தூர் - 9 - 0 - 2
அடையார் - 10 - 0 - 4
பெருங்குடி - 8 - 0 - 3
சோழிங்கநல்லூர் - 2 - 0 - 1
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,700 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 686 பேர்
உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. இதுவரை, 1683 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 752 பேர் குணமடைந்துள்ளது வீடு திரும்பியுள்ளனர். இதற்கிடையே, கொரோனா பலி எண்ணிக்கை 20 ஆக இருந்த நிலையில் 21 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று, சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில், இருதய சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 70 வயது முதியவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு நள்ளிரவில் உயிரிழந்ததார்.
மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 72 வயது மூதாட்டி உயிரிழப்பு
மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 72 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த மூதாட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகரின் தாயார் ஆவார். மூதாட்டி உயிரிழந்ததை அடுத்து கொரேனாவால் மதுரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. இரு தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்தார்.
சென்னை அடையாறில் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவருக்கு கொரோனா தொற்று
சென்னை அடையாறில் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.