தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா
தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா உறுதிபாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு
தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில், 17 பேருக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அடுத்த மாதம்(மே) 3-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் ளது.
மேலும் மக்கள் அத்தியா வசிய தேவைக்காக காய்கறி, மளிகை, மருந்து வாங்குவதற் காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படு கின்றனர். இதற்காக 3 வண்ணங்களில் அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள் ளது. அதையும் மீறி வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்கள் வந்த வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில், மாவட்டத்திலேயே முதன் முதலில் பாதிக்கப்பட்ட கும்பகோணத்தை சேர்ந்த சமையல் தொழிலாளி குணம் அடைந்ததால் நேற்று முன்தினம் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மற்றவர்களில் 9 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற வர்கள். மீதம் உள்ள 9 பேர் அவர்களை சந்தித் தவர்கள் மற்றும் உறவினர்கள் ஆவர். இதனிடையே, கொரோனா வால் பாதிக்கப் பட்டவர்களு டன் தொடர்பில் இருந்த உறவினர்களையும், சந்தித்தவர் களையும் மாவட்ட நிர்வாகம் கடந்த மாத இறுதிக்குள் கண்டறிந்து, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், செங்கிப்பட்டி பொறியியல் கல்லூரி வளாகத்திலும் அமைக்கப்பட்டு உள்ள கொரோனா தடுப்பு சிறப்பு மையத்திலும் தனிமைப்படுத்தி யது.
இவர்களது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவர்களில் 173 பேருக்கு தொற்று இல்லை என்பது சில நாட்களுக்கு முன்பு தெரிய வந்ததையடுத்து அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில், வல்லம், திருவை யாறு, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 14 பேர் கடந்த 1-ந் தேதி தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு முதல் கட்ட பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், இவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. என்றாலும் இவர்கள் செங்கிப் பட்டி பொறியியல் கல்லூரியில் உள்ள கொரோனா தடுப்பு சிறப்பு மையத்தில் தனிமைப் படுத்தப்பட்டு தொடர் மருத்துவக்கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். இவர் களுக்கு 2-ம் கட்ட பரிசோதனை செய்யப்பட்ட தில் கொரோனா தொற்று இருப்பது நேற்று கண்டறியப் பட்டது. இதேபோல் வல்லம் மற்றும் கும்பகோணத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டு கண்காணிக்கப்பட்ட மேலும் 3 பேருக்கும் என நேற்று ஒரே நாளில் மட்டும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து இவர்கள் 17 பேரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு கொரோனா சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தஞ்சை மாவட்டத் தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், “ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு, அவர் கள் செங்கிப்பட்டி பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப் பட்டிருந்தனர். அவர்களில் 47 பேரில் 33 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. மீதமுள்ள 14 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிக்கப் பட்ட 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது.
நாம் தனிமைப்படுத்தப்பட்டு வைத்திருந்ததன் காரணமாக இத்தொற்று மற்றவர்களுக்குப் பரவுவது தடுக்கப்பட்டுள்ளது. எனவே 17 பேருக்கு தொற்று இருப்பதால் அச்சப்பட தேவையில்லை. அவர்களை தனிமைப்படுத்தியதால் சமூகத்தொற்று தடுக்கப் பட்டுள்ளது. இந்த விவ காரத்தை மாவட்ட நிர்வாக மும், மருத்துவக்கல்லூரியும் தொலைநோக்கு பார்வை யுடன் கையாண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது” என்றனர்.
இந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் வயதான 2 பெண்களும், ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற சீர்காழியை சேர்ந்த பெண்ணும், அந்த குழந்தையும் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தனர்.
ஆனால் இறந்த 3 பெண்களுக்கும் கொரோனா அறிகுறி இல்லை என்றும், இருதய கோளாறு உள்ளிட்ட காரணங்களால் இறந்ததாக வும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
மனைவி, குழந்தைகள் சிகிச்சையில் உள்ளதால்கொரோனாவில் இருந்து மீண்டவர் வீட்டுக்கு செல்ல மறுப்பு
கொரோனாவில் இருந்து மீண்டவர் வீட்டுக்கு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார்.
கொரோனாவில் இருந்து மீண்டவர் வீட்டுக்கு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தன்னுடைய மனைவி, குழந்தைகள் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ளதால் இவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களாக நாகர்கோவில் டென்னிசன் ரோடு, வெள்ளாடிச்சிவிளை, தேங்காப்பட்டணம் தோப்பு பகுதி, நாகர்கோவிலை அடுத்த மணிக்கட்டிப்பொட்டல் அனந்தசாமிபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 5 பேர் கண்டறியப்பட்டனர்.
இதையடுத்து இவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நெருங்கி பழகியவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 3 பேரின் குடும்பத்தினர் மற்றும் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இதனால் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆக உள்ளது. இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் முதன் முதலாக கொரோனா பாதிப்புள்ளவர்களாக கண்டறியப்பட்ட 5 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு 14 நாட்கள் முடிவடைந்ததை தொடர்ந்து 5 பேருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் நாகர்கோவில் வெள்ளாடிச்சி விளையைச் சேர்ந்தவர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டது தெரிய வந்தது. அதை உறுதிப்படுத்துவதற்காக மீண்டும் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.
இதையடுத்து அவரை டாக்டர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்க முடிவெடுத்தனர். ஆனால் அவர் தன்னுடைய குடும்பத்தினர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால், அவர்கள் குணமாகும் வரை ஆஸ்பத்திரியிலேயே தங்கி இருக்கப்போவதாக கூறியதாக தெரிகிறது. இதனால் டாக்டர்கள் என்ன செய்வது என்பது தெரியாமல் உள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பாக பேசப்படுகிறது.
இதற்கிடையே கொரோனாவில் இருந்து விடுபட்டுள்ளவரின் பாட்டியான 88 வயது மூதாட்டியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்து 14 நாட்கள் முடிந்ததையடுத்து அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபடவில்லை என்பது தெரிய வந்தது. இருப்பினும் அவருக்குள் இருக்கும் கொரோனா வைரசுகள் பாதிப்படைந்து வருவதால் இன்னும் ஒருசில தினங்களில் அவர் கொரோனா தொற்றில் இருந்து விடுபட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று 5 பேர் பல்வேறு நோய்க்காரணங்களால் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியின் தொற்றுநோய் பிரிவு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டுள்ளன. இதேபோல் புறநோயாளிகளாக சந்தேகத்தின்பேரில் வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்த பெண் உள்பட 2 பேர் வந்தனர். அவர்களுக்கும் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, வீட்டுத் தனிமையில் இருக்குமாறு டாக்டர்கள் ஆலோசனை கூறி அனுப்பி வைத்தனர்.
நேற்று ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேகரிக்கப்பட்ட சளி மாதிரிகள் மற்றும் சுகாதாரத்துறையினர் சேகரித்த சளி மாதிரிகள் என மொத்தம் 100 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதில் யாருக் கும் கொரோனா இல்லை என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்காகமேலும் 1,000 விசேஷ உடைகள் நாகர்கோவிலுக்கு வந்ததுஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடியது
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களுக்காக மேலும் 1,000 விசேஷ உடைகள் நாகர்கோவிலுக்கு வந்தது. இந்த உடைகள் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடியது.

நாகர்கோவிலில் கொரோனா தடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வர ‘சீல்‘ வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
இந்த பகுதியில் பரிசோதனைக்காக நகர்நல மையங்களைச் சேர்ந்த டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்களும் மற்றும் கிருமிநாசினி தெளிக்க தூய்மை பணியாளர்களும் செல்கிறார்கள். அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க விசேஷ உடை தயாரிக்கப்பட்டது. அந்த வகையில் 500-க்கும் மேற்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் பாதுகாப்பு கவச உடைகள் மாநகராட்சி சார்பில் வாங்கி வைக்கப்பட்டது.
அவற்றில் சிலவற்றை நகர்நல மையத்தினரும், தூய்மை பணியாளர்களும் பயன்படுத்தியுள்ளனர். இருப்பினும் கொரோனா பாதிப்பு அதிகமாகும் பட்சத்தில் அதற்கு தகுந்தாற்போல் ஒரு முறை பயன்படுத்தும் கவச உடைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக மாநகராட்சி சார்பில் 1000 கவச உடைகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு இருந்தது.
அதேபோல காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் கொசு ஒழிப்பு பணியாளர்கள், நகர்நல மையங்களில் பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள், மாநகராட்சி முழுவதும் தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு கை சுத்தப்படுத்தும் திரவம் (ஹேன்ட் சானிட்டைசர்) வழங்க 1000 லிட்டர் கை சுத்தப்படுத்தும் திரவத்துக்கும் ஆர்டர் கொடுக்கப்பட்டு இருந்தது.
இவை இரண்டும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நேற்று காலை நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தது. அவற்றை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், நகர்நல அதிகாரி கின்சால் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் கவச உடைகள் சரியாக இருக்கிறதா? என சில தூய்மை பணியாளர்கள் போட்டு பார்த்தனர்.
தென்காசியில் மேலும் 5 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு - புளியங்குடி-நன்னகரம் ‘ஹாட்ஸ்பாட்’ ஆக அறிவிப்பு
தென்காசி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்து உள்ளது. அதிக பேர் பாதிக்கப்பட்ட புளியங்குடி, நன்னகரம் ‘ஹாட்ஸ்பாட்’ ஆக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் ஏற்கனவே 6 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் புளியங்குடி நகர் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் மேலும் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புளியங்குடி அகஸ்தியர் கோவில் தெருவை சேர்ந்த ஒருவருக்கும், காயிதே மில்லத் தெருவை சேர்ந்த இன்னொருவருக்கும், முத்து தெருவை சேர்ந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று அவர்களும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் புளியங்குடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து நகரசபை சுகாதார அலுவலர்கள், பணியாளர்கள், வருவாய் துறையினர், போலீசார் அந்த தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து தெருக்களையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள், முத்து தெரு, காயிதே மில்லத் தெரு, அகஸ்தியர் கோவில் தெருவை சேர்ந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வசிக்கும் தெருக்கள் முற்றிலுமாக தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. அந்த தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அந்த தெருக்களில் உள்ள அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள தெருக்களில் வசிப்பவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்க நகரசபை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்துக்கு கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள மண்டல சிறப்பு அதிகாரியும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குனருமான எம்.கருணாகரன், மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன், கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் ஆகியோர் புளியங்குடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைககள் குறித்து நேற்று நேரில் வந்து அதிரடியாக ஆய்வு செய்தனர். பின்னர் அதிகாரிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்கள்.
தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி, நன்னகரம் ஆகிய பகுதிகள் ‘ஹாட்ஸ்பாட்‘ ஆக அறிவிக்கப்பட்டு உள்ளன. இதுவரை இந்த மாவட்டத்தில் 14 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 பேருக்கு மாதிரி எடுக்கப்பட்டு நெல்லைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மூச்சுத்திணறல் இருந்த 6 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் 70 ஆயிரத்து 423 வீடுகளில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 100 பேருக்கு சர்வே செய்யப்பட்டுள்ளது. மேலும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 2,317 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். அவர்களில் 2,034 பேருக்கு 28 நாட்கள் முடிந்துவிட்டது. இவர்களுக்கு நோய் தொற்று இல்லை. மேலும் 283 தனிமையில் உள்ளனர். அவர்களுக்கும் விரைவில் இந்த காலம் முடிவடைந்து விடும்.
இந்த ஆய்வின்போது, கடையநல்லூர் தாசில்தார் அழகப்பராஜா, புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ், நகரசபை ஆணையாளர் குமார் சிங், பொறியாளர் சுரேஷ், சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி, தூய்மை இந்தியா பணிகள் மேற்பார்வையாளர் விஜயராணி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.
கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் மேலும் 4 பேர் அனுமதி
கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் மேலும் 4 பேர் அனுமதிக்கப்பட்டனர்.
கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனியாக வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.
அங்கு கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளைச் சேர்ந்த 4 பேர் கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கோவில்பட்டி மில் தெருவைச் சேர்ந்த 24 வயதான வாலிபரும், முகமதுசாலிஹாபுரத்தைச் சேர்ந்த 39 வயதான ஆண் ஒருவரும், மேலப்பட்டியைச் சேர்ந்த 63 வயதான முதியவரும், கயத்தாறைச் சேர்ந்த 65 வயதான மூதாட்டியும் தொடர் இருமலால் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் நேற்று கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களது ரத்த மாதிரிகளை சேகரித்து, ஆய்வக பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதன்மூலம் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது.
நகராட்சி முழுவதும் ‘சீல்’: பூந்தமல்லியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி
பூந்தமல்லியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் நகராட்சி முழுவதும் ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது. அவருடன் சீட்டு விளையாடிய நண்பர்களுக்கு ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
பூந்தமல்லியை சேர்ந்த ஒருவர், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் கம்பெனியில் மேலாளராக உள்ளார். இவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவரது மனைவி மற்றும் பிள்ளைகளும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இதையடுத்து பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் சார்பில் இவர் வசித்து வந்த வீட்டை சுற்றிலும் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி குமணன்சாவடி, பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் சாலையின் இருபுறமும் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பூந்தமல்லிக்குள் நுழையும் பகுதி, வெளியேறும் இடங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.
பூந்தமல்லி டிரங்க் சாலை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் உள்ள அனைத்து தெருக்களிலும் இரும்பு மற்றும் மரக்கட்டைகள் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் யாரும் வெளியே செல்லாத வகையிலும், வெளியாட்கள் யாரும் உள்ளே வராத வகையிலும் சீல் வைக்கப்பட்டுஉள்ளது. கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட அவர், ஊரடங்கில் பொழுதை கழிக்க தனது நண்பர்களுடன் சீட்டு விளையாடி உள்ளார். இதனால் அவரது நண்பர்கள் 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பதை உறுதி செய்ய அவர்களின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
அத்துடன் அவருடன் தொடர்பில் இருந்த மற்றவர்கள் குறித்தும் தகவல் சேகரிக்கப்பட்டு அவர்களையும் தனிமைப்படுத்தும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். அந்த பகுதி முழுவதும் தினமும் 3 வேளையும் கிருமி நாசினி மற்றும் பிளிச்சீங் பவுடர் தெளிக்கும் பணி நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த பகுதியில் உள்ள கடைகள் முழுவதும் அடைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களை கொடுக்கப்பட்டுள்ள கடைகளின் செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு வாங்கி கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்றால் பலியான அரிசி ஆலை அதிபருடன் தொடர்பில் இருந்த 44 பேர் மருத்துவமனையில் அனுமதி
கொரோனா தொற்றால் பலியான அரிசி ஆலை அதிபருடன் தொடர்பில் இருந்த 44 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் பானாம்பட்டு பகுதியை சேர்ந்த அரிசி ஆலை அதிபர் ஒருவர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவர் டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்று விட்டு விழுப்புரம் திரும்பியவர்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. அதுபோல் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களின் பட்டியலிலும் அவர் இல்லை.
இந்த சூழ்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு விழுப்புரம் கே.கே.சாலையை சேர்ந்த உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் யார் மூலமாவது இந்நோய் தொற்று அவருக்கு பரவியிருக்கலாம் என்றும், டெல்லி மாநாடு சென்றுவிட்டு விழுப்புரம் வந்தவர்களில் யாரேனும் மருத்துவமனையில் சேர்ந்து உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருந்து அவர்கள் மூலமாக பரவியிருக்குமா? என்று சுகாதாரத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றினால் பலியான அரிசி ஆலை அதிபர் இதுவரை எங்கெங்கு சென்று வந்துள்ளார்? என்றும் அவருடன் யார், யாரெல்லாம் தொடர்பில் இருந்துள்ளனர் என்பது குறித்த விவரங்களை அதிகாரிகள் சேகரித்தனர்.
அந்த வகையில் அவருடன் தொடர்பில் இருந்த 44 பேரை முதல்கட்டமாக சுகாதாரத் துறையினர் கண்டறிந்துள்ளனர். அவர்கள் 44 பேரையும் விழுப்புரத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதோடு அவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்து அனுப்பியுள்ளனர். இந்த முடிவுகள் வந்த பிறகே யார், யார்? கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் தெரியவரும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
கொரோனா பரிசோதனை முடிவு வெளியாவதில் காலதாமதம்
மாவட்டத்தில் மருத்துவ பரிசோதனை முடிவு தெரிவதில் காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க வழி வகை காண வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்று கண்டறிவதற்கு தனிமைப்படுத்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 689 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 400-க்கும் மேற்பட்டோருக்கு சோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.
தற்போதுள்ள நிலையில் மருத்துவ பரிசோதனைக்கான ரத்த மாதிரிகள் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதனால் முடிவுகள் தெரிய மிகுந்த காலதாமதம் ஏற்படும் நிலை உள்ளது. சோதனை முடிவுகள் காலதாமதம் ஆகும் நிலையில் அவை துல்லியமாக இருக்குமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. தொடர்ந்து நடத்தப்படும் மருத்துவ பரிசோதனைகளும் மதுரை அரசு ஆஸ்பத்திரியை நம்பித்தான் உள்ளது.
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்துவதற்கான உபகரணம் விரைவில் செயல்பட தொடங்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரேபிட் கிட் உபகரணமும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைவில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் ரேபிட் கிட் உபகரணம் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் மத்திய அரசால் கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதியாக கண்டறியப்பட்டுள்ள விருதுநகர் மாவட்டத்துக்கு இந்த உபகரணத்தை விரைந்து அனுப்ப மாநில சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகமும் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியிலேயே கொரோனா தொற்று மருத்துவ பரிசோதனை நடத்துவதற்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்த வேண்டியது அவசியமாகும். சோதனை முடிவுகள் தெரியாத நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்று எந்த நிலையில் உள்ளது என்பதை உறுதிப்படுத்த முடியாத நிலையே உள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும்.
கொரோனா தீவிர சிகிச்சைக்கு பலன்: சென்னை ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் 30 பேர் ‘டிஸ்சார்ஜ்’
டாக்டர்கள் வழங்கிய தீவிர சிகிச்சையின் பலனாக கொரோனா தொற்று வேகமாக குணமடைந்து வருகிறது. சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ஒரே நாளில் 30 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர்.
சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 350 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. இந்த ஆஸ்பத்திரியில் 95 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
கடந்த 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 30 பேர் உடல்நலம் தேறினர். இதையடுத்து அவர்களுடைய ரத்தம், சளி மாதிரி 2 முறை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்கள் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்தது தெரிய வந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சைக்கு பலனாக கொரோனாவில் இருந்து மீண்ட 30 பேரும் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதில் 25 பேர் டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள். 5 பேர் அவர்களது குடும்பத்தினர் ஆவார்கள்.
அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி ஆஸ்பத்திரி வளாகத்தில் நடைபெற்றது. மருத்துவ கல்வி இயக்குனரும், ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி டீனுமான (பொறுப்பு) டாக்டர் நாராயணபாபு தலைமையில் டாக்டர்கள், செவிலியர்கள் கைதட்டி உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு பிஸ்கட், ஜூஸ், பழங்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.
கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு டாக்டர் நாராயணபாபு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார். அப்போது, ‘நீங்கள் குணம் அடைந்திருந்தாலும் 2 வாரங்கள் வீட்டில் இருந்து ஓய்வு எடுங்கள். வெளியே வராதீர்கள்.’ என்று கூறினார்.
தமிழகத்தில் கொரோனா நோயின் பிடியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பூரண குணமடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நகராட்சி முழுவதும் ‘சீல்’: பூந்தமல்லியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி - அவருடன் சீட்டு விளையாடிய நண்பர்களுக்கு பரிசோதனை

பூந்தமல்லி டிரங்க் சாலை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் உள்ள அனைத்து தெருக்களிலும் இரும்பு மற்றும் மரக்கட்டைகள் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் யாரும் வெளியே செல்லாத வகையிலும், வெளியாட்கள் யாரும் உள்ளே வராத வகையிலும் சீல் வைக்கப்பட்டுஉள்ளது.
கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட அவர், ஊரடங்கில் பொழுதை கழிக்க தனது நண்பர்களுடன் சீட்டு விளையாடி உள்ளார். இதனால் அவரது நண்பர்கள் 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பதை உறுதி செய்ய அவர்களின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.