திருச்சி மற்றும் திருப்பூரில் ஒரு வயது குழந்தைக்கு கொரோனா - 13 சிறுவர்-சிறுமிகள் உள்பட 60 பேருக்கு பாதிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் 13 சிறுவர்-சிறுமிகள் உள்பட 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு வயது குழந்தைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரசுக்கு உலகளவில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பலியாகி விட்டனர். இந்த நோயின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவது மத்திய, மாநில அரசுகளை கவலையடைய வைத்துள்ளது. இந்த வைரசை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதையடுத்து மாநாட்டிற்கு சென்று வந்த 59 பேர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் முதல் கட்டமாக 6 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதே போல் லண்டன் சென்று திரும்பிய திருப்பூர் தொழிலதிபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக இருந்தது. அதன்பின்னர் அதன்பின்னர் படிப்படியாக உயர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆனது.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் திருப்பூர் காங்கேயம் ரோட்டை சேர்ந்த 8 வயது சிறுவன், காங்கேயம் ரோடு பெரியதோட்டத்தை சேர்ந்த 54 வயதுடைய ஆண், பெரியதோட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுவன், அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி, அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன், காங்கேயம் ரோடு ரேணுகாநகரை சேர்ந்த 10 வயது சிறுவன், குமரானந்தாபுரம் இந்திராநகரை சேர்ந்த 36 வயது பெண், மங்கலம் பெரியபள்ளிவாசல் தெருவை சேர்ந்த 25 வயது ஆண், அதே பகுதிகளை சேர்ந்த 45 வயது பெண், பெரியதோட்டத்தை சேர்ந்த 36 வயதுடைய பெண், ரேணுகாநகரை சேர்ந்த 31 வயது பெண், அவினாசி தேவராயம்பாளையத்தை சேர்ந்த 65 வயது பெண், அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன் மற்றும் ஒரு வயது ஆண் குழந்தை, 47 வயது பெண்.

அவினாசி தேவராயம்பாளைத்தை 22, 24 வயது பெண், திருப்பூர் தேவராயம்பாளையத்தை சேர்ந்த 26 வயது பெண், தேவராயம்பாளையம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த 8 வயது சிறுமி, 5 வயது சிறுமி, 85 வயது மூதாட்டி, 3 வயது சிறுமி, மற்றொரு 3 வயது சிறுமி, 29 வயது ஆண், 55 வயது ஆண்கள் 2 பேர், காங்கேயம் ரோடு பெரியதோட்டத்தை சேர்ந்த 50 வயது ஆண், மங்கலம் பெரியபள்ளிவாசல் தெருவை சேர்ந்த 12 வயது சிறுவன், தாராபுரம் நாச்சிமுத்துபுதூரை சேர்ந்த 17 வயது சிறுவன், தாராபுரம் கொளஞ்சிவாடியை சேர்ந்த 48 வயது பெண், அதே பகுதியை சேர்ந்த 19 வயது மற்றும் 22 வயது ஆண், தாராபுரம் சொக்கநாதபாளையத்தை சேர்ந்த 30 வயது பெண், தாராபுரம் அட்டவானிமஜீத்தெருவை சேர்ந்த 35 வயது ஒரு ஆண், தாராபுரம் நாச்சிமுத்துபுதூரை சேர்ந்த 40 வயது ஆண் என மொத்தம் 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் திருப்பூர் மாநகர பகுதிகளில் 11 பேரும், அவினாசி பகுதியில் 15 பேரும், தாராபுரத்தில் 7 பேரும், மங்கலத்தில் 2 பேரும் வசித்து வருகின்றனர். இதில் 5 சிறுமி உள்பட 17 பெண்கள் மற்றும் 8 சிறுவர் உள்பட 18 ஆண்கள் அடங்குவர். இவர்களில் ஒரு வயது குழந்தையும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 61-ஆக தற்போது உயர்ந்தது. இவர்கள் அனைவரும் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் லண்டன் சென்று திரும்பிய தொழிலதிபர் குணமடைந்து வீடு திரும்பி விட்டார்.

இது குறித்து மாநகராட்சி நகர் நல அலுவலர் பூபதி கூறும்போது “ திருப்பூர் கொரோனா பாதித்த மாவட்டமாக அறிவிக்கப்பட்டு சிவப்பு நிற பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். மேலும் சளி, இருமல் உள்ளவர்கள் இருக்கிறார்களா? என மருத்துவக்குழு மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதற்காக மருத்துவ குழுவும் அமைக்கப்படும்“ என்றார்.

கொரோனா தொற்று உள்ளவர்கள் அனைவரும் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 61-ஆக உயர்ந்து மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் 4-வது இடத்தில் இருப்பது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாநகர், மங்கலம், தாராபுரம், உடுமலை பகுதியை சேர்ந்தவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வீடுவீடாக கொண்டு சென்று வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் யாரையும் போலீசார் வெளியே வரஅனுமதிக்கவில்லை. இதற்கிடையில் நோய் தொற்று உள்ளவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என மொத்தம் 881 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருந்த 60 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருச்சியில் ஒரு வயது குழந்தைக்கு கொரோனா தொற்று
திருச்சியில் ஒரு வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 9-வது இடத்தில் திருச்சி உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்சி மாவட்டத்தில் இன்று புதிதாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நான்கு பேரில், 2 பேர் திருச்சி மாநகராட்சி பகுதியைச் சேர்ந்தவர்கள், மேலும் 2 பேர் துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்கள்.

இவர்களில் ஒரு வயது குழந்தையும் அடங்கும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே சிகிச்சை பெற்று வரும் தந்தையின் மூலம் இக்குழந்தைக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. கைக்குழந்தை என்பதால், அதன் தாயாரும் உடனிருக்க வேண்டிய ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்து, தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 9-வது இடத்தில் திருச்சி உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 43 நபர்களையும் தொடர்ந்து மருத்துவக்குழுவினர் கண்காணித்து தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad