தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் மேலும் 121 பேருக்கு கொரோனா; தமிழக மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம் வெளியீடு
தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் 121 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,058 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 603 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை 673 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,058 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 பேருக்கும், நாமக்கல் மாவட்டத்தில் 2 பேருக்கும், காஞ்சிபுரத்தில் ஒருவருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 27 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் 27 பேர் மீண்ட நிலையில் இதுவரை 1,128 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவால் இன்று ஒருவர் மட்டும் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட வாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு;
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29,435லிருந்து 29,974-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா காரணமாக இந்தியாவில் 937 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தொற்றில் இருந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,869லிருந்து 7,027-ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,128 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 27 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
* தமிழகத்தில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலி எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது.
* தமிழகத்தில் 30,692 பேர் இதுவரை வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். 47 பேர் அரசு கண்காணிப்பில் உள்ளனர்.
* தமிழகத்தில் இதுவரை 93,189 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று மட்டும் 6,850 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 41 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 902 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் 54.84 % பேர் குணமடைந்துள்ளனர்.
* சென்னையில் மக்கள்தொகை அதிகம் என்பதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது.
* தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு இதுவரை மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
* செங்கல்பட்டில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா பாதிப்பு.
* சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்களில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
* இன்று பாதிக்கப்பட்டவர்களில் 80 ஆண்கள், 41 பெண்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.