நெல்லையில் ஊரடங்கு: ஓட்டல்கள் மூடப்பட்டதால் ரூ.10 கோடி வருவாய் இழப்பு
நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் ஓட்டல்கள் மூடப்பட்டதில் ரூ.10 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 24-ந்தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பஸ், ரெயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டன.
ஓட்டல்கள், வணிக வளாகங்கள் இழுத்து மூடப்பட்டன. மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தங்கு தடையில்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காய்கறி கடைகள், மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்து இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள் மூடப்பட்டதால், அதில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். பார்சல் உணவு வழங்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரிய ஓட்டல்கள் மூடப்பட்டதால் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்களின் சங்கத்தின் நெல்லை மாவட்ட தலைவர் ராம்குமாரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
ரூ.10 கோடி வருவாய் இழப்பு
ஊரடங்கு உத்தரவால் ஓட்டல் தொழில் மிகவும் பாதித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் உள்ளன. இதில் சுமார் 10 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். தற்போது அவர்கள் அனைவரும் வேலை இழந்துள்ளனர். கடந்த மாதம் அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டு விட்டது. இந்த மாதமும் சம்பளம் கொடுப்போம். பங்குனி திருவிழா, திருமண விழாக்களுக்கு ஆன்லைன் மூலம் தங்கும் அறை முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த ஊரடங்கு உத்தரவால் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்தாகி விட்டது. அதனால் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பணத்தை திருப்பி தர வேண்டும்.
அதிக நாட்கள் மூடப்பட்டதால் பராமரிக்க சிரமமாக இருக்கும். இந்த ஊரடங்கு உத்தரவால் இதுவரை ரூ.10 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் என்ன செய்வது? என்றே தெரியவில்லை. மத்திய, மாநில அரசுகள் ஓட்டல் உரிமையாளர்களின் நிலையை எண்ணி பார்த்து நல்ல முடிவு எடுக்க வேண்டும்.
நெல்லையில் நிவாரண பொருட்கள் வாங்க ரேஷன் கடைகளில் அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்
நெல்லையில் நிவாரண பொருட்கள் வாங்க ரேஷன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் நேற்று அலை மோதியது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கிய நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 நிவாரண உதவியாக வழங்கப்படுகிறது.
மேலும் ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவையும் இலவசமாக வழங்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி நெல்லை மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கடந்த 1- ந் தேதி முதல் டோக்கன் வழங்கப்பட்டது. அதில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஒரு நாளைக்கு 100 ரேஷன் கார்டுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் வரிசையாக நின்று நிவாரண பொருட்களை வாங்கி சென்றனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை. இதனால் நிவாரண உதவி ரூ.1,000 வீடு, வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கினார்கள்.
கூட்டம் அலை மோதியது
அப்போது ஒரு டோக்கன் வழங்கப்பட்டது. அதில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்படி நெல்லையில் உள்ள ரேஷன் கடைகளில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. பல ரேஷன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. பல கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மக்களை சமூக இடைவெளி விட்டு நிற்க செய்தார்கள். பின்னர் அவர்கள் வரிசையில் நின்று நிவாரண பொருட்களை வாங்கி சென்றனர்.