பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்
நாடு தழுவிய ஊரடங்கு நாளையுடன் நிறைவடய உள்ள நிலையில், நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
நாளையுடன் (14 ஆம் தேதி) நிறைவடைய உள்ள 21 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு, மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கலாம் என்று செய்திகள் வெளியாகிவருகின்றன. இதனால், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு மீண்டும் ஒரு முறை உரையாற்றி அறிவிப்பு வெளியிடுவார் என்று செய்திகள் வெளியாகிவந்தன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் கொரோனா வைரசின் தாக்கம் குறையவில்லை.
இதை உறுதிப்படுத்தும் வகையில், பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. நாளை காலை பிரதமர் மோடி உரையாற்றும் போது, ஊரடங்கில் சில விதி விலக்குகளும் இருக்கலாம் என்று கடந்த சில நாட்களாக செய்தி வெளியாவதால், மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு குறித்து பிரதமர் மோடி பேசுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமர் மோடி கடந்த மாதம் 24-ம் தேதி இரவு நாடு முழுவதும் ஊரடங்கு நிலையை அமல்படுத்தினார். இந்த ஊரடங்கு நாளை இரவுடன் முடிவுக்கு வருகிறது.
அதே நேரம், மத்திய அரசின் முடிவுக்கு காத்திருக்காமல், மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம், தெலங்கானா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்கள் தாமாகவே வரும் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளன. முன்னதாக, நேற்று முன்தினம் மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலமாக பிரதமர் மோடி நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக புதிய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, இம்முறை ஒட்டு மொத்தமாக ஊரடங்கை அறிவிக்காமல், கொரோனா பாதிப்பு அடிப்படையில் நாட்டை 3 மண்டலங்களாக பிரித்து ஊரடங்கை பின்பற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக பிரதமர் மோடி ஏற்கனவே, அனைத்து மாநில முதல்வர்கள், கட்சிகளின் பிரதிநிதிகள், மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தார். பிரதமரின் அறிவிப்பை அமல்படுத்துவோம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் நாளை காலை 10 மணிக்கு உரையாற்றுகிறார். தனது உரையில், ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அறிவிக்கப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு உத்தவு நாளை இரவுடன் முடியவுள்ள நிலையில், பிரதமர் மோடியின் உரை முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரதமர் நாளை உரையாற்றவுள்ள பிரதமர் அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.