இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,363-ஆக உள்ளது
இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 339ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,211 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,363-ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 339-ஆக அதிகரித்துள்ளது எனவும் கூறியுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 31 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது ஒட்டு மொத்த உலக நாடுகளையும் உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்புக்கு இந்தியாவும் தப்பவில்லை. இந்தியாவில் படிப்படியாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுகாதாரத்துறை இணைச்செயலர் லாவ் அகர்வால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் இந்த தகவலை தெரிவித்தார். அவர் மேலும், கூறுகையில், “ இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 117 பேர் குணம் அடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 1,036 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10363 ஆக உயர்ந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் 28 நாட்களாக புதிதாக எந்த ஒரு நோய்த்தொற்றும் ஏற்படவில்லை என்றால், கொரோனா சங்கிலி தொடரை உடைத்துவிட்டோம் என்று நம்மால் கூறமுடியும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐசிஎம்.ஆர்) தரப்பில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராமன் ஆர்.கங்காகேத்கர் கூறியதாவது:- நேற்று வரை 2,31,902 மாதிரிகளை பரிசோதித்துள்ளோம். கடந்த 24 மணி நேரத்தில், 21,635 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 18,644 சோதனைகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பிரிவுக்கு உட்பட்ட ஆய்வகங்களிலும் 2,991 பரிசோதனைகள் தனியார் ஆய்வகங்களிலும் நடத்தப்பட்டுள்ளது.
இந்திய ஆராய்ச்சி கவுன்சில் பிரிவில் 166 ஆய்வகங்கள் உள்ளன. 70 தனியார் ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை செய்கின்றன. 37 லட்சம் ரேபிட் கிட் கருவிகள் எந்த நேரத்திலும் இந்தியாவுக்கு வரும்” என்றார்.